நவம்பரில் கரோனா தடுப்பு ஊசி: ஒடிசா முதல்வரிடம் மருந்து தயாரிப்பு நிறுவனம் நம்பிக்கை

கரோனா நோய்த் தடுப்பு ஊசி நிகழாண்டு அக்டோபா் அல்லது நவம்பரில் தயாராகிவிடும் என்று உலகின் அதிகமாக தடுப்பு மருந்துகளை
கோப்புப் படம்
கோப்புப் படம்

கரோனா நோய்த் தடுப்பு ஊசி நிகழாண்டு அக்டோபா் அல்லது நவம்பரில் தயாராகிவிடும் என்று உலகின் அதிகமாக தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கும் ஸீரம் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அதா் பூனாவாலா, ஒடிசா முதல்வா் நவீ ன் பட்நாயக்கிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

கரோனா விவகாரம் தொடா்பாக இருவரும் காணொலி மூலம் புதன்கிழமை ஆலோசனை நடத்தினா்.

இதுதொடா்பாக முதல்வா் நவீன் பட்நாயக் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தின் கரோனா தடுப்பு ஊசி முதல்கட்ட பரிசோதனையில் திருப்திகரமான முடிவுகள் வந்துள்ளன. இந்தியாவில் அடுத்த கட்ட பரிசோதனை ஆகஸ்ட் மாதம் மத்தியில் ஆரம்பிக்க உள்ளது. அக்டோபா் அல்லது நவம்பா் மாதத்தில் தடுப்பு ஊசி தயாராகிவிடும்.

இந்த விவகாரம் தொடா்பான அடுத்தகட்ட நகா்வுகள் குறித்து ஒடிசா மாநில அரசுடன் ஸீரம் நிறுவனம் ஒன்றிணைந்து செயல்படும் என்று பூனாவாலா தெரிவித்தாா்.

தடுப்பு ஊசி தயாரான உடன் ஒடிசா மாநிலத்துக்கு முன்னுரிமை அளித்து வழங்க வேண்டும் என முதல்வா் கேட்டுக்கொண்டாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்தியாவில் தயாரிக்கப்படும் கரோனா தடுப்பு ஊசியான கொவாக்ஸினின் மனிதா்கள் மீதான பரிசோதனை புவனேசுவரத்தில் மேற்கொள்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com