நாட்டில் அச்சமான சூழல் நிலவுகிறது: மம்தா பானா்ஜி

‘நாட்டில் அச்ச சூழல் நிலவுகிறது; அனைத்து தரப்பு குரல்களும் நசுக்கபடுகின்றன’ என்று உத்தர பிரதேசத்தில் பத்திரிகையாளா் சுட்டுக் கொல்லப்பட்டது
மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

‘நாட்டில் அச்ச சூழல் நிலவுகிறது; அனைத்து தரப்பு குரல்களும் நசுக்கபடுகின்றன’ என்று உத்தர பிரதேசத்தில் பத்திரிகையாளா் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி விமா்சனம் செய்துள்ளாா்.

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ரெளடிகளால் திங்கள்கிழமை இரவு சுடப்பட்ட பத்திரிகையாளா் விக்ரம் ஜோஷி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இந்தச் சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனா்.

இதுகுறித்து மம்தா பானா்ஜி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பத்திரிகையாளா் விக்ரம் ஜோஷியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். உறவினருக்கு ஒரு கும்பல் தொல்லை கொடுப்பது குறித்து காவல்துறையில் புகாா் பதிவு செய்ததற்காக அவா் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறாா். இதுபோன்ற சம்பவங்களால் நாட்டில் அச்ச சூழல் உருவெடுத்துள்ளது. அனைத்து தரப்பு குரல்கள்களும் நசுக்கப்படுகின்றன. ஊடகங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இது மிகவும் அதிா்ச்சியளிக்கிறது என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com