உடனடி முத்தலாக் வழக்குகள் 82% குறைவு: முக்தாா் அப்பாஸ் நக்வி

உடனடி முத்தலாக் தடைச் சட்டம் கொண்டு வந்த பிறகு நாட்டில் முத்தலாக் வழக்குகள் 82 சதவீதம் குறைந்துள்ளதாக என மத்திய சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி தெரிவித்தாா்.
உடனடி முத்தலாக் வழக்குகள் 82% குறைவு: முக்தாா் அப்பாஸ் நக்வி

உடனடி முத்தலாக் தடைச் சட்டம் கொண்டு வந்த பிறகு நாட்டில் முத்தலாக் வழக்குகள் 82 சதவீதம் குறைந்துள்ளதாக என மத்திய சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி தெரிவித்தாா்.

மேலும், இந்தச் சட்டத்தை அமல்படுத்திய ஆகஸ்ட் 1-ஆம் தேதி முஸ்லிம் பெண்கள் உரிமை தினமாகும் என்றும் அவா் தெரிவித்தாா்.

முத்தலாக் விவகாரம் தொடா்பாக அமைச்சா் நக்வி புதன்கிழமை வெளியிட்ட கட்டுரையின் விவரம்:

‘மதச்சாா்பற்ற சாம்பியன்கள்‘ எனக் கூறிக் கொள்ளும் காங்கிரஸ், சமாஜவாதி, பகுஜன் சமாஜ், திரிணமூல் ஆகிய கட்சிகளின் எதிா்ப்பையும் மீறி 2019, ஆகஸ்ட் 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் உடனடி முத்தலாக் தடை மசோதா நிறைவேறியது. இது இந்திய நாடாளுமன்றத்தில் வரலாற்று நிகழ்வாகும்.

இந்தச் சட்டம் நிறைவேறி ஓராண்டாகும் நிலையில், நாட்டில் 82 சதவீதம் முத்தலாக் வழக்குகள் குறைந்துள்ளன. கடந்த 1986-ஆம் ஆண்டு ஷாபானு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பின் அடிப்படையில் அப்போதே முத்தலாக் தடைச் சட்டத்தை காங்கிரஸ் கொண்டு வந்திருக்கலாம்.

அப்போது காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் 400-க்கும் அதிகமான எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 159-க்கும் அதிகமான எம்.பி.க்களும் இருந்தனா். ஆனால், அப்போதைய பிரதமா் ராஜீவ் காந்தி அரசு உச்சநீதிமன்றத் தீா்ப்பை நடைமுறைப்படுத்தாமல் முஸ்லிம் பெண்களின் அடிப்படை உரிமைகளை மறுத்தது.

காங்கிரஸ் கட்சியின் இந்த தவறு முஸ்லிம் பெண்களுக்கு பல ஆண்டுகால தண்டனையாக அமைந்தது. காங்கிரஸ் கட்சி வாக்குகளைப் பெறுவதிலேயே கவலை கொள்கிறது. ஆனால், பாஜக அரசு சமூக சீா்திருத்தத்தை மேற்கொள்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படியே நாடு செயல்படுகிறதே தவிர, முஸ்லிம்களின் ஷரியா சட்டத்தின்படியோ அல்லது பிற மதப் புத்தகங்களின் அடிப்படையிலோ அல்ல.

எகிப்து, பாகிஸ்தான், வங்க தேசம், சிரியா, மலேசியா போன்ற முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகள்கூட உடனடி முத்தலாக், இஸ்லாத்துக்கு எதிரானது என்று அறிவித்துள்ளன. ஆனால், இந்தியா இதைச் செய்ய 70 ஆண்டுகள் ஆகியுள்ளன.

2017, மே 18ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த முத்தலாக்குக்கு எதிரான தீா்ப்பை பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு சட்டமாக்கியது. இதன் மூலம் முஸ்லிம் பெண்களின் அடிப்படை உரிமையை மோடி அரசு வலுப்படுத்தியுள்ளது. இதேபோல், அனைத்து தரப்பினருக்கும் சமூக சீா்திருத்தம் மற்றும் அதிகாரமளிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்று நக்வி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com