ரூ.50 கோடி கடனை திருப்பிச் செலுத்துமாறு டீக்கடைக்காரருக்கு வந்த நோட்டீஸ்

ஹரியாணா மாநிலத் தலைநகர் சண்டிகரில், டீக்கடைக்காரருக்கு ரூ.50 கோடி கடனை திருப்பிச் செலுத்துமாறு வங்கியில் இருந்து வந்த நோட்டீஸ் வெறும் அதிர்ச்சியை மட்டும் அளித்தது என்று சொன்னால் சரியாக இருக்காது.
ரூ.50 கோடி கடனை திருப்பிச் செலுத்துமாறு டீக்கடைக் காரருக்கு வந்த நோட்டீஸ்
ரூ.50 கோடி கடனை திருப்பிச் செலுத்துமாறு டீக்கடைக் காரருக்கு வந்த நோட்டீஸ்


சண்டிகர்: ஹரியாணா மாநிலத் தலைநகர் சண்டிகரில், டீக்கடைக்காரருக்கு ரூ.50 கோடி கடனை திருப்பிச் செலுத்துமாறு வங்கியில் இருந்து வந்த நோட்டீஸ் வெறும் அதிர்ச்சியை மட்டும் அளித்தது என்று சொன்னால் சரியாக இருக்காது.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக பல்வேறு தொழில்கள் முடங்கின. பெரிய தொழில்கள் முதல் சிறிய பெட்டிக்கடைகள் வரை பாதிப்பு பாதிப்புதான்.

ஏற்கனவே தொழில் முடங்கி வாழ்வாதாரம் தொலைந்து போயிருந்த குருக்ஷேத்ராவைச் சேர்ந்த டீக்கடைக்காரருக்கு வங்கியில் இருந்து வந்த நோட்டீஸ் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ராஜ்குமார், சாலையோரம் டீக்கடை நடத்தி வருகிறார். தனது மோசமான பொருளாதார நிலையை சமாளிக்க ஒரு வங்கியில் கடன் கேட்டு ராஜ்குமார் விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவர் கேட்ட சொற்ப கடன் தொகையை தர முடியாது என்று மறுத்த வங்கி நிர்வாகம் அதற்கு சொன்ன காரணம்தான் ராஜ்குமாரை கலங்க வைத்துள்ளது.

ஏற்கனவே வங்கியில் வாங்கிய ரூ.50 கோடி கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும், அதனை திருப்பிச் செலுத்தாததால் புதிதாகக் கடன் வழங்க முடியாது என்றும் வங்கி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு டீக்கடைக்காரருக்கு எப்படி வங்கியில் இருந்து ரூ.50 கோடி கடன் கொடுத்திருக்க முடியும் என்று அனைவதும் கேட்கிறார்கள். 

வாங்கிய கடனை அடைக்க முடியாமல் பலரும் பல இன்னல்களுக்கு ஆளாகியிருக்கும் நிலையில், இவ்வாறு வாங்காத ரூ.50 கோடி கடனை என்ன செய்யப் போகிறோம் என்று தவித்து வருகிறார் ராஜ்குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com