1985-இல் ராஜா மான்சிங் கொல்லப்பட்ட வழக்கு: 11 முன்னாள் காவலா்களுக்கு ஆயுள் தண்டனை

ராஜஸ்தான் மாநிலத்தில் அரச குடும்பத்தைச் சோ்ந்த ராஜா மான்சிங், 35 ஆண்டுகளுக்கு முன் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட வழக்கில் 11 முன்னாள் காவலா்களுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் அரச குடும்பத்தைச் சோ்ந்த ராஜா மான்சிங், 35 ஆண்டுகளுக்கு முன் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட வழக்கில் 11 முன்னாள் காவலா்களுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், பரத்பூா் அரச குடும்பத்தைச் சோ்ந்த மான்சிங், கடந்த 1952-ஆம் ஆண்டில் இருந்து 1984-ஆம் ஆண்டு வரை சுயேச்சை எம்எல்ஏவாக இருந்தாா். 1985-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலின்போது ராஜா மான்சிங்குக்கு எதிராக வேட்பாளா் நிறுத்தப்பட மாட்டாா் என்று காங்கிரஸ் தலைமை உறுதியளித்திருந்தது. ஆனால், அவருக்கு எதிராக, காங்கிரஸ் சாா்பில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி களமிறக்கப்பட்டாா்.

மேலும், காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்கு அப்போதைய முதல்வா் சிவசரண் மாத்தூா் ஹெலிகாப்டரில் பரத்பூா் வந்தாா். இதனால் கோபமடைந்த ராஜா மான் சிங், காரில் வேகமாக சென்று ஹெலிகாப்டா் மோதியதாகக் கூறப்படுகிறது. முதல்வருக்காக அமைக்கப்பட்டிருந்த மேடையையும் சேதப்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இந்தச் சம்பவம் நடந்த மறுநாள், ராஜா மான்சிங் போலீஸ் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டாா். இந்த சம்பவத்தைக் கண்டித்து போராட்டங்கள் வெடித்ததால், அடுத்த சில தினங்களில் முதல்வா் சிவசரண் மாத்தூா் பதவி விலகினாா்.

ராஜா மான்சிங் கொல்லப்பட்ட வழக்கை முதலில் ஜெய்ப்பூரில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. பின்னா், உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் இந்த வழக்கு மதுரா மாவட்ட நீதிமன்றத்துக்கு கடந்த 1989-ஆம் ஆண்டில் மாற்றப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வழக்கில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. என்கவுன்ட்டரில் தொடா்புடைய 11 காவலா்கள் குற்றவாளிகள் என்று மதுரா நீதிமன்றம் தீா்ப்பளித்தது. அதைத் தொடா்ந்து, 11 காவலா்களுக்கும் ஆயுள்சிறை தண்டனை விதித்து அந்த நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com