இழந்த நேரம் ஒருபோதும் திரும்ப வராது, கடந்து செல்வோம்: ஏ.ஆர். ரஹ்மான்

​நமது வாழ்வின் வீணான நேரம் ஒருபோதும் திரும்ப வராது, கடந்து செல்வோம் என இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
​நமது வாழ்வின் வீணான நேரம் ஒருபோதும் திரும்ப வராது, கடந்து செல்வோம் என இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார். (கோப்புப்படம்)
​நமது வாழ்வின் வீணான நேரம் ஒருபோதும் திரும்ப வராது, கடந்து செல்வோம் என இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார். (கோப்புப்படம்)


நமது வாழ்வின் வீணான நேரம் ஒருபோதும் திரும்ப வராது, கடந்து செல்வோம் என இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் தனக்கான வாய்ப்புகளைத் தடுக்க ஒரு கூட்டம் செயல்பட்டு வருவதாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். ரஹ்மானின் இந்தப் பேட்டி சமூக ஊடகங்களில் மிகவும் பரவலாகப் பரவியது.

இதுபற்றி ரஹ்மானைக் குறிப்பிட்டு பிரபல இயக்குநர் சேகர் கபூர், தனது சுட்டுரைப் பக்கத்தில் ஒரு பதிவைப் பதிவிட்டிருந்தார். 

இயக்குநர் சேகர் கபூர் பதிவு:

"உங்களுடைய பிரச்னை என்னவென்று தெரியுமா ரஹ்மான்? நீங்கள் ஆஸ்கர் வென்று வந்துள்ளீர்கள். பாலிவுட்டுக்கு அங்குதான் பிரச்னை. பாலிவுட்டால் கையாள முடியாத திறன் உங்களிடம் இருப்பதையே இது வெளிப்படுத்துகிறது."

சேகர் கபூரின் இந்தப் பதிவுக்குப் பதிலளிக்கும் வகையில், ரஹ்மான் சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

"இழந்த பணம், புகழ் எல்லாம் திரும்பி வரும். ஆனால், நமது வாழ்வின் வீணான நேரம் ஒருபோதும் திரும்ப வராது. கடந்து செல்வோம். நாம் செய்வதற்கு சிறந்த செயல்கள் நிறைய உள்ளன." என்று பதிவிட்டுள்ளார் ரஹ்மான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com