மகாராஷ்டிரத்தில் 4 லட்சத்தைத் தாண்டியது மொத்த பாதிப்பு

​மகாராஷ்டிரத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 9,211 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
​மகாராஷ்டிரத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 9,211 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)
​மகாராஷ்டிரத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 9,211 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)


மகாராஷ்டிரத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 9,211 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதித்தோர், பலியானோர் பற்றிய தரவுகள் மாநில சுகாதாரத் துறையால் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, அங்கு புதிதாக 9,211 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 298 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 4,00,651 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 14,463 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம், மகாராஷ்டிரத்தில் இதுவரை மொத்தம் 2,39,755 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் அங்கு 1,46,129 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு குணமடைவோர் விகிதம் 59.84 சதவிகிதமாக உள்ளது.

தாராவி:

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 2 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தாராவியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,545 ஆக உயர்ந்துள்ளது. எனினும், 83 பேர் மட்டுமே அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com