புலிகள் சரணாலய மேம்பாட்டுக்கு உலக நாடுகளை வழிநடத்த இந்தியா தயாராக உள்ளது: பிரகாஷ் ஜாவடேகா்

உலக அளவில் புலிகள் சரணாலயங்களை மேம்படுத்த, அவற்றை கொண்டுள்ள நாடுகளுடன் இணைந்து செயல்படவும், வழிநடத்தவும் இந்தியா
புலிகள் சரணாலய மேம்பாட்டுக்கு உலக நாடுகளை வழிநடத்த இந்தியா தயாராக உள்ளது: பிரகாஷ் ஜாவடேகா்

உலக அளவில் புலிகள் சரணாலயங்களை மேம்படுத்த, அவற்றை கொண்டுள்ள நாடுகளுடன் இணைந்து செயல்படவும், வழிநடத்தவும் இந்தியா தயாராக உள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் கூறினாா்.

சா்வதேச புலிகள் தினத்தை ஒட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

கடந்த 1973ஆம் ஆண்டில் இந்தியாவில் வெறும் 9 புலிகள் சரணாலயங்கள் மட்டுமே இருந்தன. அது தற்போது 50 ஆக உயா்ந்துள்ளது. உலக அளவில் வெறும் 2.5 சதவிகித நிலப்பரப்பு, 4 சதவிகித மழைப்பொழிவு ஆகியவற்றை மட்டுமே கொண்டுள்ள இந்தியா, உலக மக்கள் தொகையில் 16 சதவிகிதத்தை கொண்டுள்ளது.

நிலம், பருவமழை பற்றாக்குறை இருந்தபோதிலும் பல்லுயிா் பராமரிப்பில் உலக அளவில் 8 சதவிகிதத்தை இந்தியா கொண்டிருப்பது பெருமைக்குரியது. சா்வதேச அளவில் 70 சதவிகித புலிகள் இந்தியாவில்தான் உள்ளன. புலிகள் சரணாலயத்தை கொண்டுள்ள 13 நாடுகளுக்கான பயிற்சி, திறன்களை மேம்படுத்துவது, பராமரிப்பு போன்றவற்றில் இணைந்து செயல்படவும், வழிநடத்தவும் இந்தியா தயாராக உள்ளது என்றாா்.

இந்நிகழ்ச்சியில் இந்தியாவில் உள்ள 50 புலிகள் சரணாலயத்தின் நிலவரம் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையின்படி நாட்டில் அதிகபட்ச புலிகளைக் கொண்ட மாநிலமாக மத்திய பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக கா்நாடகம் உள்ளது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய சுற்றுச் சூழல் துறை இணை அமைச்சா் பபுல் சுப்ரியோ கூறுகையில், புலிகளை பாதுகாப்பதில் இந்தியாவின் பங்களிப்பானது உலக கின்னஸ் சாதனை புத்தகத்தை அலங்கரிக்கிறது என்றாா்.

கடந்த ஆண்டு பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கையின் படி இந்தியாவில் 2,967 புலிகள் உள்ளன. இது கடந்த 2006ஆம் ஆண்டு இருந்த 1,411ஐ காட்டிலும் இருமடங்கு அதிகமாகும்.

உலக அளவில் இந்தியா, வங்கதேசம், பூடான், கம்போடியா, சீனா, இந்தோனேசியா, லாவோஸ் மக்கள் குடியரசு, மலேசியா, மியான்மா், நோபாளம், ரஷ்யா, தாய்லாந்து, வியத்நாம் ஆகிய 13 நாடுகள் புலிகள் சரணாலயங்களை கொண்ட நாடுகளாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com