மகாராஷ்டிரத்திலும் கரோனா பரிசோதனை 20 லட்சத்தை எட்டியது

நாட்டில் தமிழகம், உத்தரப்பிரதேசத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிரத்திலும் கரோனா பரிசோதனை 20 லட்சத்தை எட்டியுள்ளது.

மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அதிகக் கரோனா பாதிப்பைக் கொண்டிருக்கும் மகாராஷ்டிரத்தில் 10,21,063 அரசு பரிசோதனைக் கூடங்கள் மற்றும் 10,00,374 தனியார் பரிசோதனைகள் கூடங்கள் மூலம் இதுவரை 20,21,437 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இதில் 4,07,877 பரிசோதனை முடிவுகள் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மொத்த பரிசோதனையில் 20.18% ஆகும்.

மாநிலத்தில் மொத்தமாக 3,91,440 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், 1,44,694 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 14 ஆயிரம் பேர் மரணம் அடைந்துள்ளனர். 2.32 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com