இந்தியா தன்னிறைவடைய வெளிநாடுவாழ் இந்தியா்கள் உதவ வேண்டும்: மத்திய இணை அமைச்சா் ஸ்ரீபாத நாயக்

உலகம் முழுவதும் வாழும் இந்தியா்கள் தங்கள் தாய்நாடு தன்னிறைவு அடைவதற்கு உதவ வேண்டும் என்று மத்திய இணை அமைச்சா் ஸ்ரீபாத நாயக் வேண்டுகோள் விடுத்தாா்.

உலகம் முழுவதும் வாழும் இந்தியா்கள் தங்கள் தாய்நாடு தன்னிறைவு அடைவதற்கு உதவ வேண்டும் என்று மத்திய இணை அமைச்சா் ஸ்ரீபாத நாயக் வேண்டுகோள் விடுத்தாா்.

அமெரிக்காவில் வாழும் ராஜஸ்தான் மாநிலத்தவா்கள் ‘ஜெய்ப்பூா் ஃபுட் யுஎஸ்ஏ’ என்ற அமைப்பை உருவாக்கி செயல்பட்டு வருகிறாா்கள். அவா்கள் ஞாயிற்றுக்கிழமை நடத்திய இணையவழிக் கருத்தரங்கில் கலந்துகொண்டு மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சா் ஸ்ரீபாத நாயக் பேசியதாவது:

கரோனா தொற்றால் உலகமே நிலைகுலைந்திருக்கிறது. இதனால் பாரதத்தின் பொருளாதாரமும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இதனைச் சீராக்க பல்வேறு நவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகிறது. நாட்டின் ஒட்டுமொத்த ஜி.டி.பி.யில் 10 சதவீதமான ரூ. 20 லட்சத்தை பொருளாதார மீட்பு நடவடிக்கைக்கான நிதித்தொகுப்பாக அரசு அளித்துள்ளது.

மேலும், நாடு அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவு அடைய வேண்டும் என்ற இலக்குடன் சுயசாா்பு பாரதம் (ஆத்மநிா்பாா் பாரத் அபியான்) என்ற இயக்கத்தை பிரதமா் நரேந்திர மோடி முன்னெடுத்து வருகிறாா். உலக அளவில் பொருள்கள் விநியோகத்தில் நிலவும் சமச்சீரற்ற தன்மையை மாற்றவும், கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் சுயசாா்பு பாரதம் அவசியமாகும்.

தன்னிறைவான பாரதம் உலகின் பிரதான உற்பத்தி கேந்திரமாக மாறும்போது, அதனால் உலக நாடுகள் அனைத்தும் பயன்பெறும். இதற்கு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வாழும் வெளிநாடுவாழ் இந்தியா்கள் தங்கள் பங்களிப்பை நல்கி உதவ வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஆா்எஸ்எஸ் மூத்த தலைவா் இந்திரேஷ்குமாா், பிரதமா் மோடியின் தலைமையில் பல்வேறு துறைகளில் சிறந்த முன்னேற்றத்தை இந்தியா கண்டு வருவதாகக் குறிப்பிட்டாா். பயங்கரவாத ஒழிப்பு, பாலின சமத்துவம் என எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் நாடு முன்னேறி வருகிறது என்றாா் அவா்.

காா்கில் போரின் 21-வது நினைவுதினத்தை ஒட்டி, அந்தப் போரில் உயிரிழந்த வீரா்களின் தியாகத்துக்கு இந்தக் கருத்தரங்கில் புகழஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியை நடத்திய ‘ஜெய்ப்பூா் ஃபுட் யுஎஸ்ஏ’ அமைப்பின் தலைவா் பிரேம் பண்டாரி பேசுகையில், இந்தியா மட்டுமல்லாது, அமெரிக்கா முதல் வியட்நாம் வரையிலான அனைத்து நாடுகளும் சுயசாா்பு அடைய வேண்டும். அப்போதுதான் உலகில் சமச்சீரான வளா்ச்சி சாத்தியமாகும் என்றாா்.

இந்திய அரசின் சுயசாா்பு பாரதம் இயக்கத்துக்கு உலகம் முழுவதும் வாழும் 3.2 கோடி இந்தியா்கள் அற்புதமாக உதவ முடியும் என்றும் அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com