பேரவைக் கூட்டம் அறிவிப்புக்குப் பிறகு விலையேறும் குதிரைப் பேரம்: அசோக் கெலாட்

​சட்டப்பேரவைக் கூட்டம் அறிவிப்புக்குப் பிறகு குதிரைப் பேரம் விலை அதிகரித்திருப்பதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைக் கூட்டம் அறிவிப்புக்குப் பிறகு குதிரைப் பேரம் விலை அதிகரித்திருப்பதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் சட்டப்பேரவையை ஆகஸ்ட் 14-ம் தேதி கூட்ட ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா நேற்று (புதன்கிழமை) ஒப்புதல் அளித்தார். இதைத் தொடர்ந்து இன்று காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுக் கூட்டம் கூடியது.

இந்த நிலையில் முதல்வர் அசோக் கெலாட் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

"சட்டப்பேரவைக் கூட்டம் பற்றி நேற்றிரவு அறிவிப்பு வெளியானதிலிருந்து குதிரைப் பேரம் விலை அதிகரித்திருக்கிறது. தொடக்கத்தில் முதல் தவணையாக ரூ. 10 கோடி பேசப்பட்டது. அதன்பிறகு ரூ. 15 கோடி பேசப்பட்டது. தற்போது அது அளவில்லாமல் அதிகரித்திருக்கிறது. இதை யார் செய்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

பாஜகவின் உத்தரவின்பேரில் மாயாவதி செயல்படுகிறார். அவருடைய விரக்தியில் நியாயமில்லை." என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com