மத்தியப் பிரதேச முதல்வர் உள்பட பாஜக தலைமையை ஆட்டிப்படைக்கும் கரோனா

மத்தியப் பிரதேச மாநில பாஜக தலைமையை கரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. முதல்வர் முதல், மாநில பாஜக தலைவர் வரை கரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
மத்தியப் பிரதேச முதல்வர் உள்பட பாஜக தலைமையை ஆட்டிப்படைக்கும் கரோனா
மத்தியப் பிரதேச முதல்வர் உள்பட பாஜக தலைமையை ஆட்டிப்படைக்கும் கரோனா


போபால்: மத்தியப் பிரதேச மாநில பாஜக தலைமையை கரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. முதல்வர் முதல், மாநில பாஜக தலைவர் வரை கரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான், மாநில பாஜக தலைவர் மற்றும் கஜுராஹோ மக்களவை உறுப்பினர் வி.டி. ஷர்மா, கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சுஹாஸ் பகத் ஆகியோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை முதல்வர் சௌகானுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு,சிரயு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பகத்துக்கு செவ்வாய்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.

சமீபத்தில் வி.டி. ஷர்மாவுக்கும் கரோனா உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், மத்தியப் பிரதேச மாநில அமைச்சர் அரவிந்த் படோரியாவுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இவர் மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் இறுதிச் சடங்கில் பங்கேற்றார். அதே இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் உள்பட நான்கு தலைவர்களுக்குமே தற்போது கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களைத் தவிர்த்து மத்தியப் பிரதேச நீர்வளத் துறை அமைச்சர் துளசி சிலாவத், சிறுபான்மைத் துறை இணை அமைச்சர் ராம் கெலாவன் பட்டேல் ஆகியோருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com