துணை ராணுவ கேன்டீன் விற்பனை பட்டியலில் மைக்ரோவேவ் ஓவன் முதல் 1000 பொருள்கள்  நீக்கம்

இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் துணை ராணுவத்தினருக்கான கேன்டீனில் மைக்ரோவேவ் ஓவன் முதல் காலணிகள், புகழ்பெற்ற தயாரிப்புகள் பலவும் விற்பனைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
துணை ராணுவ கேன்டீன் விற்பனை பட்டியலில் மைக்ரோவேவ் ஓவன் முதல் 1000 பொருள்கள்  நீக்கம்


புது தில்லி: இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் துணை ராணுவத்தினருக்கான கேன்டீனில் மைக்ரோவேவ் ஓவன் முதல் காலணிகள், புகழ்பெற்ற தயாரிப்புகள் பலவும் விற்பனைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் அடிப்படையில், நாடு முழுவதும் உள்ள துணை ராணுவத்தினருக்கான கேன்டீனில் ஜூன் 1-ம் தேதி முதல் உள்நாட்டில் தயாரித்த பொருள்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பல முன்னணி நிறுவனங்களின் இறக்குமதி பொருட்கள் விற்பனைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் இதுவரை விற்பனை செய்யப்பட்டு வந்த பொருள்களை இந்தியாவில் தயாரித்தவை, கச்சா பொருள்களை இறக்குமதி செய்து இந்தியாவில் தயாரித்தவை, முற்றிலும் இறக்குமதி செய்யப்பட்டவை என மூன்றாக பிரித்து, முதல் இரண்டு பொருள்களை மட்டும் விற்பனை செய்வது என்றும், மூன்றாவது ரகத்தை விற்பனைப் பட்டியலில் இருந்து நீக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com