கரோனா பாதிப்பில் 7 ஆம் இடத்தில் இந்தியா! பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளை விஞ்சியது

கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 9 ஆம் இடத்தில் இருந்து 7 ஆம் இடத்தை அடைந்துள்ளது. 
கரோனா பாதிப்பில் 7 ஆம் இடத்தில் இந்தியா! பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளை விஞ்சியது

கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 9 ஆம் இடத்தில் இருந்து 7 ஆம் இடத்தை அடைந்துள்ளது. 

இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 8,392 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,90,535-ஆக உயா்ந்துள்ளது.

மேலும், நேற்று 230 பேர் உயிரிழந்ததைத் தொடா்ந்து, பலி எண்ணிக்கை 5,394-ஆக அதிகரித்துள்ளது. இவா்களில் 93,322 போ் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 91,819 போ் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 

இந்தியாவில் கடந்த ஒரு சில தினங்களாக ஒருநாள் பாதிப்பு 8 ஆயிரத்தை கடந்த நிலையில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,392 பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்து, உலக நாடுகளில் கரோனா பாதிப்பில் இந்தியா 7 ஆம் இடத்தை அடைந்துள்ளது. 

கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட 10 நாடுகளில் கடைசி இடத்தில் இருந்த ஈரானை பின்னுக்குத் தள்ளி, இந்தியா கடந்த 25 ஆம் தேதி, 10வது இடத்தைப் பிடித்த நிலையில், 29 ஆம் தேதி 9வது இடத்துக்கு வந்தது. தொடர்ந்து பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளை பின்னுக்குத் தள்ளி தற்போது 7 ஆம் இடத்தில் உள்ளது. பாதிப்பில் 10 ஆம் இடத்தில் இந்தியா, ஒரு வாரத்தில் 7 ஆம் இடத்திற்குச் சென்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்திலும், பிரேசில் இரண்டாம் இடத்திலும் உள்ளது. தொடர்ந்து ரஷியா, ஸ்பெயின், பிரிட்டன், இத்தாலி ஆகிய நாடுகள் முறையே மூன்றாம், நான்காம், ஐந்தாம் மற்றும் ஆறாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com