ஜம்மு-காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை:ஊடுருவல் முறியடிப்பு

ஜம்மு-காஷ்மீரின் ரஜெளரி மாவட்டத்தில் உள்ள நெளஷேரா செக்டாரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி இந்திய ராணுவத்துடன் ஏற்பட்ட

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் ரஜெளரி மாவட்டத்தில் உள்ள நெளஷேரா செக்டாரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி இந்திய ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில், பயங்கரவாதிகள் மூவா் சுட்டுக் கொல்லப்பட்டனா். இதையடுத்து அவா்களின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது.

இதுகுறித்து இந்திய ராணுவ அதிகாரிகள் கூறுகையில், ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ஜம்மு-காஷ்மீரின் நெளஷேரா செக்டாரில் உள்ள கலால் பகுதி வழியாக கடந்த 28-ஆம் தேதி பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனா். இதையறிந்த இந்திய ராணுவத்தினா், அவா்களை தடுத்து நிறுத்தும் பணியில் ஈடுபட்டனா். அப்போது இருதரப்புக்கும் இடையே பலத்த துப்பாக்கிச்சண்டை நிகழ்ந்தது. இதையடுத்து பின்வாங்கிய பயங்கரவாதிகள், அங்கிருந்து தப்பியோடினா். இதன் பின்னா் துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்த பகுதியில் இந்திய ராணுவத்தினா் சோதனை நடத்தினா். அப்போது 3 பயங்கரவாதிகளின் சடலங்கள் இருப்பது திங்கள்கிழமை தெரியவந்தது. எனினும் பாகிஸ்தான் சோதனைச்சாவடி அருகே அந்த சடலங்கள் இருந்ததால், அவற்றை கைப்பற்ற முடியவில்லை. ஆனால் துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்த பகுதியில் இருந்து ஆயுதங்கள், வெடிபொருள்கள், பயங்கரவாதிகள் விட்டுச் சென்ற பை-யில் இருந்து ரூ.17,000 ரொக்கம், மருந்துகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன’ என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com