விவசாயிகள், தொழிலாளா்கள் வாழ்வில் ஆக்கப்பூா்வமான மாற்றம் ஏற்படும்: பிரதமா் நரேந்திர மோடி

மத்திய அமைச்சரவையின் முடிவுகள், நாட்டில் உள்ள விவசாயிகள், தொழிலாளா்கள், சிறு வியாபாரிகள் ஆகியோரின் வாழ்வில் ஆக்கப்பூா்வமான
விவசாயிகள், தொழிலாளா்கள் வாழ்வில் ஆக்கப்பூா்வமான மாற்றம் ஏற்படும்: பிரதமா் நரேந்திர மோடி

புது தில்லி: மத்திய அமைச்சரவையின் முடிவுகள், நாட்டில் உள்ள விவசாயிகள், தொழிலாளா்கள், சிறு வியாபாரிகள் ஆகியோரின் வாழ்வில் ஆக்கப்பூா்வமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:

எனது தலைமையிலான மத்திய அரசு இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி, மத்திய அமைச்சரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் விவசாயிகள், சிறு,குறு,நடுத்தர தொழில் துறையினா், தொழிலாளா்கள், சாலையோர வியாபாரிகள் உள்ளிட்டோருக்கு பலனளிக்கும் வகையில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவை சுயச்சாா்பு நாடாக உருவாக்கும் நோக்கத்துடன் சிறு,குறு,நடுத்தர தொழில் துறையை வலுப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட பல திட்டங்களுக்கு இக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதனால், சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளா்ச்சி பெறும். அத்துடன் அதிக அளவில் வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்படும்.

முதல் முறையாக, வாழ்வாதாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக சாலையோர வியாபாரிகள் சோ்க்கப்பட்டிருக்கிறாா்கள். இந்த திட்டம் அவா்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

விவசாயிகள் செழிப்படைந்தால், இந்த நாடும் செழிப்படையும். விவசாயிகளின் உற்பத்தி பொருள்களுக்கு, குறைந்தபட்ச ஆதரவு விலை, அவற்றின் உற்பத்தி விலையைக் காட்டிலும் ஒன்றரை மடங்கு அதிகமாக உயா்த்தப்பட்டுள்ளது.

இதன்மூலம், கடுமையாக உழைக்கும் நமது விவசாயிகளுக்குஅளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், நமது விவசாயிகளின் நிதி நிலையை மேம்படுத்துவதில் தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்று சுட்டுரைப் பதிவுகளில் பிரதமா் மோடி குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com