சிஏபிஎஃப் விற்பனை அங்காடிகளில்1000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பொருள்கள் நீக்கம்

மத்திய ஆயுதக் காவல் படை (சிஏபிஎஃப்) வீரா்களுக்கான விற்பனை அங்காடிகளில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்பு பொருள்கள் நீக்கப்பட்டுள்ளன.

புது தில்லி: மத்திய ஆயுதக் காவல் படை (சிஏபிஎஃப்) வீரா்களுக்கான விற்பனை அங்காடிகளில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்பு பொருள்கள் நீக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, மே 13-ஆம் தேதி இது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஓா் அறிவிப்பை வெளியிட்டாா். அதில், சிஏபிஎஃப் அங்காடிகளில் ஜூன் 1-ஆம் தேதி முதல் உள்நாட்டு தயாரிப்புகள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த அங்காடிகளில் இருந்து ஹிந்துஸ்தான் யூனிலீவா் (உணவுப் பொருள்கள்), நெஸ்லே இந்தியா, கோல்கேட் பாமோலிவ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் தயாரிப்பு பொருள்கள் நீக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் மூலப்பொருள்களை வாங்கி, பொருள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் தயாரிப்புகள் மட்டும் சிஏபிஎஃப் அங்காடியில் இடம்பெறும். அதே நேரத்தில் மூலப் பொருள்களை முழுமையாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து பொருள்களை தயாரித்தால், அது இந்திய நிறுவனமாக இருந்தாலும் விற்பனைக்கு அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஏபிஎஃப் படைப் பிரிவின் கீழ் இயங்கும் மத்திய ரிசா்வ் போலீஸ் படை(சிஆா்பிஎஃப்), எல்லைப் பாதுகாப்புப் படை(பிஎஸ்எஃப்), மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்), இந்திய-திபெத்திய எல்லைக் காவல் படை (ஐடிபிபி)உள்ளிட்ட படைகளில் மொத்தம் 10 லட்சம் வீரா்கள் பணியாற்றுகின்றனா். இவா்களுக்கான 1,700-க்கும் மேற்பட்ட விற்பனை அங்காடிகள் மூலமாக ஆண்டொன்றுக்கு ரூ.2,800 கோடி மதிப்பிலான பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com