ராஜஸ்தான் மற்றும் அசாம் மாநிலத்தில் கரோனா பாதிப்பு நிலவரம்

புதன்கிழமை நிலவரப்படி ராஜஸ்தான் மற்றும் அசாம் மாநிலத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கையை அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. 
ராஜஸ்தான் மற்றும் அசாம் மாநிலத்தில் கரோனா பாதிப்பு நிலவரம்

புதன்கிழமை நிலவரப்படி ராஜஸ்தான் மற்றும் அசாம் மாநிலத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கையை அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. 

ராஜஸ்தான் 

இங்கு, மேலும் 102 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. புதிதாகப் பாதிக்கப்பட்ட தொற்றுடன் சேர்த்து, அங்கு மொத்த பாதிப்பு 9,475ஐ எட்டியுள்ளது. இதில் 2,766 பேர் மருத்துவமனை கண்காணிப்பிலிருந்து வருகின்றனர். இதுவரை 203 பேர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர். 

அசாம்

அசாம் மாநிலத்தில் இன்று புதிதாக 48 பேருக்கு கரோனா நோய்த் தொற்று பதிவாகியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதுவரை கரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 1,561 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,217 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும், 337 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர். மேலும் தொற்று காரணமாக நான்கு இறப்புகள் நிகழ்ந்துள்ளன.

இந்தியாவில் கரோனாவுக்கு மொத்தம் 2,07,615 பேர் பாதித்துள்ள நிலையில், 1,01,497 சிகிச்சையில் உள்ளனர். மேலும் 1,00,303 பேர் குணமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை 5,815 ஆக உள்ளது என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com