'நிசர்கா' புயல் வலுவிழுந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது 

‘நிசர்கா’ புயல் வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக விதர்பாவின் மேற்குப் பகுதிக்கும், அதையொட்டியுள்ள மத்தியப்பிரதேசப் பகுதிக்கும் நகர்ந்தது.
'நிசர்கா' புயல் வலுவிழுந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது 

‘நிசர்கா’ புயல் வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக விதர்பாவின் மேற்குப் பகுதிக்கும், அதையொட்டியுள்ள மத்தியப்பிரதேசப் பகுதிக்கும் நகர்ந்தது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், விதர்பாவின் மேற்குப்பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ( தீவிரப்புயல் ‘நிசர்கா’வின் வலுவிழந்த நிலை) 6 மணி நேரமாக வடகிழக்கு திசையில் மணிக்கு 27 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து, இந்திய நேரப்படி இன்று (ஜூன் 4-ஆம் தேதி) காலை 8.30 மணி நிலவரப்படி, விதர்பாவின் வடமேற்குப் பகுதி, அதையொட்டியுள்ள மத்தியப்பிரதேசத்தில், அட்சரேகை 21.2 டிகிரி வடக்கு மற்றும், தீர்க்க ரேகை 76.9 டிகிரி கிழக்கு அருகே, அகோலாவிலிருந்து (மகாராஷ்டிரா) வடமேற்கே 60 கிலோ மீட்டர் தொலைவிலும், நாக்பூரிலிருந்து (மகாராஷ்டிரா) மேற்கு-வடமேற்கு திசையில் 220 கிலோ மீட்டர் தொலைவிலும், போபாலிலிருந்து( மத்தியப்பிரதேசம்) தெற்கு-தென் கிழக்கே 230 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டிருந்தது. 

இது, கிழக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, இன்று மாலையில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com