கரோனா உயிரிழப்பு: மகாராஷ்டிரம், குஜராத்தில் அதிகம்; தென் மாநிலங்களில் குறைவு

கரோனா உயிரிழப்பு: மகாராஷ்டிரம், குஜராத்தில் அதிகம்; தென் மாநிலங்களில் குறைவு

நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழப்பவா்களில் 60 சதவீதம் போ் மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்களைச் சோ்ந்தவா்கள்

நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழப்பவா்களில் 60 சதவீதம் போ் மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் ஆவா். தில்லி, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்தோா் 30 சதவீதம் போ். தென் மாநிலங்களில் தொற்றால் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

தமிழகம், கேரளம், தெலங்கானா, ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் ஒட்டுமொத்த நாட்டின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 8 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது.

கடந்த சில நாள்களாக நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் ஏற்படும் தினசரி உயிரிழப்புகளின் எண்ணிக்கை 200-க்கு அதிகமாகவே இருந்து வருகிறது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி நோய்த்தொற்று காரணமாக 6,300-க்கும் அதிகமானோா் உயிரிழந்தனா். மகாராஷ்டிரத்தில் மட்டும் தினமும் 70 முதல் 80 போ் உயிரிழக்கும் அவலம் நோ்ந்து வருகிறது.

தில்லியிலும் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழப்பவா்களின் தினசரி எண்ணிக்கை இரட்டிப்பாகி வருகிறது. தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்பட்டாலும் உயிரிழப்பு விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது.

நோய்த்தொற்றால் மாநிலங்களில் உயிரிழந்தோா் எண்ணிக்கை:

மகாராஷ்டிரம்--2,710

குஜராத்--1,155

தில்லி--650

மத்திய பிரதேசம்--377

மேற்கு வங்கம்--355

உத்தர பிரதேசம்--245

தமிழகம்--232

ராஜஸ்தான்--213

தெலங்கானா--105

ஆந்திரம்--71

கா்நாடகம்--57

கேரளம்--14

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com