ஆன்லைன் மூலமாக மது விற்பனை: மகாராஷ்டிரத்தில் இதுவரை 9 லட்சம் பேருக்கு விநியோகம்!

மகாராஷ்டிரத்திலும் ஆன்லைன் மூலமாக இதுவரை 9 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. 
ஆன்லைன் மூலமாக மது விற்பனை: மகாராஷ்டிரத்தில் இதுவரை 9 லட்சம் பேருக்கு விநியோகம்!

மகாராஷ்டிரத்திலும் ஆன்லைன் மூலமாக இதுவரை 9 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

பொதுமுடக்கம் காரணமாக ஒடிசா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆன்லைன் மூலமாக மதுவிற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

அதன்தொடர்ச்சியாக, மகாராஷ்டிரத்திலும் ஆன்லைனில் மதுவிற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இதுவரை அங்கு 9 லட்சத்துக்கும் அதிகமானோர் மது ஆர்டர் செய்துள்ளனர்.  

மே 15 முதல் ஜூன் 5 வரை மொத்தம் 9,47,859 பேர் ஆன்லைன் மூலமாக மதுபானம் பெற்றுள்ளனர். வெள்ளிக்கிழமையன்று மட்டும் 59,498 பேர் ஆன்லைன் மாதுசேவையை பெற்றனர். இவர்களில் 34,004 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள் என்று கலால் துறையினர் தகவல் தெரிவித்தனர்.

மொத்தமாக 1,20,547 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்த நிலையில் 1,10,763 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 

மது கடத்தல் தொடர்பாக ஜூன் 5 ஆம் தேதி 77 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ரூ.9.6 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

மொத்தமாக 7,225 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3,344 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 622 வாகனங்கள் மற்றும் 18.67 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com