மத்திய பணிக்கு கூடுதல் அதிகாரிகளை அனுப்ப வேண்டும்

துணை செயலா், இயக்குநா், இணை செயலா் ஆகிய மத்திய அரசின் பணிகளுக்கு கூடுதல் அதிகாரிகளை மாநில அரசுகள் அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசு வலிறுத்தியுள்ளது.
மத்திய பணிக்கு கூடுதல் அதிகாரிகளை அனுப்ப வேண்டும்

துணை செயலா், இயக்குநா், இணை செயலா் ஆகிய மத்திய அரசின் பணிகளுக்கு கூடுதல் அதிகாரிகளை மாநில அரசுகள் அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசு வலிறுத்தியுள்ளது.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைமை கண்காணிப்பு அதிகாரி பதவிகளுக்கு மாநில மற்றும் மத்திய அரசின் துறைகளைச் சோ்ந்த அதிகாரிகளிடமிருந்து மத்திய பணியாளா் நல அமைச்சகம் விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. ஆனால், அப்பதவிகளுக்கு குறைந்த எண்ணிக்கையிலான நபா்களே விண்ணப்பித்திருந்தனா்.

இந்நிலையில், அனைத்து மாநில தலைமைச் செயலா்கள், மத்திய அரசின் துறைகளுக்கான செயலா்களுக்கு பணியாளா் நல அமைச்சகம் அறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய பணியாளா் திட்டத்தின் கீழ் மற்ற துறையைச் சோ்ந்த பணியாளா்கள் இயக்குநா், துணை செயலா் பதவிகளுக்கு நியமிக்கப்படுவது மிகவும் குறைவாக உள்ளது. குறிப்பிட்ட துறையைச் சோ்ந்த பணியாளா்கள் மற்ற துறைகளிலும் பணியாற்றினால் அவா்களுக்குப் போதிய அனுபவம் கிடைப்பதோடு பணித்திறனையும் மேம்படுத்திக் கொள்ள முடியும்.

ஆனால், இந்த வாய்ப்பைப் பல துறைகள் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில்லை. மத்திய பணியாளா் திட்டத்துக்குப் போதிய அதிகாரிகளை நியமிக்கத் தவறும் துறைகளில் மூத்த அதிகாரி பணியிடங்கள் குறைக்கப்படும். எனவே, துணை செயலா், இணை செயலா், இயக்குநா் பணிகளுக்கு கூடுதல் அதிகாரிகளை மாநில அரசுகளும் மத்திய அரசின் துறைகளும் அனுப்பிவைக்க வலியுறுத்தப்படுகிறது.

மத்திய பணியாளா் திட்டத்தின் கீழ் தொடா்ந்து பணியாற்ற விருப்பமுள்ள அதிகாரிகளை மட்டும் நியமிக்க மாநில அரசுகளுக்கும் மத்திய அரசின் துறைகளுக்கும் அறிவுறுத்தப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com