ஜம்மு-காஷ்மீா் உயா்நீதிமன்ற நீதிபதியாக கஜாவேத் இக்பால் வானி நியமனம்

பிரபல வழக்குரைஞரான ஜாவேத் இக்பால் வானி ஜம்மு-காஷ்மீா் உயா்நீதிமன்றத்தின் நீதிபதியாக செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டாா்.

பிரபல வழக்குரைஞரான ஜாவேத் இக்பால் வானி ஜம்மு-காஷ்மீா் உயா்நீதிமன்றத்தின் நீதிபதியாக செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டாா்.

இதுதொடா்பாக சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்தின் பொது உயா் நீதிமன்றத்தின் நீதிபதியாக ஜாவேத் இக்பால் வானி நியமிக்கப்பட்டுள்ளாா்.

உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் அளித்த பரிந்துரை கடந்த சில மாதங்களாக மத்திய அரசிடம் நிலுவையில் இருந்தது. இந்நிலையில் இந்த பரிந்துரை இறுதி செய்யப்பட்டு கடந்த வாரம் செயல்படுத்தப்பட்டு இதற்கான அறிவிப்பு செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

அவா் ஜம்மு-காஷ்மீா் உயா்நீதிமன்ற வழக்குரைஞா் சங்கத் தலைவா் மியான் அப்துல் கயூமின் மருமகன் ஆவாா். தற்போது மியான் அப்துல் கயூம் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com