கரோனா நிலவரம்: அமித் ஷாவுடன் கேஜரிவால் ஆலோசனை

தில்லியில் நிலவும் கரோனா சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன், முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று (புதன்கிழமை) ஆலோசனை நடத்தினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


தில்லியில் நிலவும் கரோனா சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன், முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று (புதன்கிழமை) ஆலோசனை நடத்தினார்.

தில்லியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிப்புக்குள்ளாவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் ஆயிரத்தைத் தாண்டி பதிவாகி வருகிறது. இந்த நிலையில், தில்லி நிலவரம் குறித்து அரவிந்த் கேஜரிவால், அமித் ஷாவுடன் ஆலோசனை நடத்தினார். 

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் கேஜரிவால் தெரிவித்திருப்பதாவது:

"உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தேன். தில்லியில் நிலவும் கரோனா சூழல் குறித்து அவருடன் விரிவாக ஆலோசனை நடத்தினேன். முழு ஒத்துழைப்பை தருவதாக அவர் உறுதியளித்தார்."

தில்லியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 1,501 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் 32,810 ஆக உயர்ந்துள்ளது. அங்கு மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 984 ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com