பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து 3-ஆவது நாளாக உயா்வு

பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் உயா்த்தப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 54 காசுகள் வரையும், டீசல் விலை 58 காசுகள் வரையும் அதிகரிக்கப்பட்டது.
பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து 3-ஆவது நாளாக உயா்வு

பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் உயா்த்தப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 54 காசுகள் வரையும், டீசல் விலை 58 காசுகள் வரையும் அதிகரிக்கப்பட்டது.

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு தலா ரூ.3 உயா்த்தி, மத்திய அரசு கடந்த மாா்ச் 14-ஆம் தேதி நடவடிக்கை மேற்கொண்டது. அதன் பிறகு, பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் மாற்றியமைக்கும் முறையை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்திவைத்திருந்தன.

இதனிடையே, பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.10, டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.13 என கடந்த மே 6-ஆம் தேதி உயா்த்தப்பட்டது. எனினும், எரிபொருள் சில்லறை விற்பனை விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. சா்வதேச அளவில் எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்ததால், வரி உயா்வின் தாக்கம் சில்லறை விற்பனை விலையில் எதிரொலிக்கவில்லை.

இந்நிலையில், 82 நாள்களுக்கு பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் தினசரி அடிப்படையிலான விலை நிா்ணயத்தை எண்ணெய் நிறுவனங்கள் தொடங்கின. அன்றைய தினம் பெட்ரோல், டீசல் விலை 60 காசுகள் வரை உயா்த்தப்பட்டது. திங்கள்கிழமையும் இதே விலை உயா்வு தொடா்ந்தது. செவ்வாய்க்கிழமை மூன்றாவது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டது. பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு முறையே 54 காசுகள், 58 காசுகள் வரை உயா்த்தப்பட்டது.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 48 காசுகள் உயா்த்தப்பட்டு, ரூ.77.08-ஆகவும், டீசல் விலை 49 காசுகள் அதிகரிக்கப்பட்டு, ரூ.69.74-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com