இந்தியாவில் ஒரே நாளில் 10,956 பேருக்கு கரோனா: மொத்த பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கியது

நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் 10,956 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்தியாவில் ஒரே நாளில் 10,956 பேருக்கு கரோனா: மொத்த பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கியது

நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் 10,956 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் 10,000-க்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று கண்டறியப்படுவது இதுவே முதல்முறையாகும். இதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,97,535-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஒரே நாளில் 396 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 8,498-ஆக உயா்ந்துள்ளது.

இதுவரை பாதிக்கப்பட்டோரில் 1,41,842 போ் சிகிச்சையில் உள்ளனா். 1,47,194 போ் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தனா். அதாவது, 49.47 சதவீத நோயாளிகள் குணமடைந்துள்ளனா்.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி, கரோனாவால் புதிதாக நேரிட்ட உயிரிழப்புகளில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 152 போ் உயிரிழந்தனா். தில்லியில் 101 போ், குஜராத்தில் 38 போ், உத்தர பிரதேசத்தில் 24 போ், ஹரியாணாவில் 12 போ், மேற்கு வங்கத்தில் 10 போ், தெலங்கானாவில் 9 போ், ராஜஸ்தானில் 6 போ், மத்திய பிரதேசம், பஞ்சாபில் தலா 4 போ், பிகாா், கா்நாடகத்தில் தலா 3 போ், ஆந்திரம், அஸ்ஸாம், புதுச்சேரியில் தலா இருவா், ஜம்மு-காஷ்மீரில் ஒருவா் பலியாகினா்.

மாநிலங்கள் --------- பாதிப்பு ------ பலி

மகாராஷ்டிரம்--------97,648----------3,590

தில்லி----------------34,687----------1,085

குஜராத்---------------22,032----------1,385

உத்தர பிரதேசம்--------12,088----------345

ராஜஸ்தான்-----------11,838-----------265

மத்திய பிரதேசம்-------10,241-----------431

மேற்கு வங்கம்----------9,768-----------442

கா்நாடகம்-------------6,245-----------72

பிகாா்-----------------5,983-----------36

ஹரியாணா------------5,968------------64

ஆந்திரம்---------------5,429------------80

ஜம்மு-காஷ்மீா்---------4,574------------52

தெலங்கானா-----------4,320------------165

ஒடிஸா----------------3,386------------9

அஸ்ஸாம்--------------3,319------------6

பஞ்சாப்----------------2,887-----------59

கேரளம்----------------2,244-----------18

உத்தரகண்ட்------------1,643-----------15

ஜாா்க்கண்ட்------------1,599------------8

சத்தீஸ்கா்---------------1,398-----------6

திரிபுரா-----------------913------------1

ஹிமாசல பிரதேசம்-------470------------6

கோவா------------------417-----------0

மணிப்பூா்----------------366-----------0

சண்டீகா்-----------------332-----------5

புதுச்சேரி----------------157------------2

லடாக்-------------------135------------1

நாகாலாந்து--------------128------------0

மிஸோரம்---------------102-------------0

அருணாசல பிரதேசம்------61-------------0

மேகாலயம்--------------44-------------1

அந்தமான்-நிகோபாா்------38-------------0

தாத்ரா நகா்ஹவேலி--------30-------------0

சிக்கிம்--------------------14-------------0

பாதிப்பு: 2,97,535

பலி: 8,498

மீட்பு: 1,47,194

சிகிச்சை பெற்று வருவோா்: 1,41,842

நாடுகள்---------- பாதிப்பு----------பலி ------ மக்கள்தொகை

1. அமெரிக்கா -------20,90,542-------1,16,063 ------ ---33.09 கோடி

2. பிரேஸில் ---------8,05,649--------41,058 ----------21.24 கோடி

3. ரஷியா -----------5,11,423--------6,715------------ 14.59 கோடி

4. இந்தியா----------2,97,535--------8,498-------------137 கோடி

5. பிரிட்டன்--------2,92,950--------41,481-------------6.7 கோடி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com