மத வழிபாட்டு தலங்கள் சட்டம் 1991-க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஹிந்து அமைப்புகள் மனு

மத வழிபாட்டு தலங்கள் சட்டம் 1991-இன் ஒரு பிரிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஹிந்து அமைப்புகள் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தன.
மத வழிபாட்டு தலங்கள் சட்டம் 1991-க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஹிந்து அமைப்புகள் மனு

மத வழிபாட்டு தலங்கள் சட்டம் 1991-இன் ஒரு பிரிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஹிந்து அமைப்புகள் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தன.

1947 ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்கு முன்பு உருவாக்கப்பட்ட மத வழிபாட்டு தலங்கள் அனைத்தும் அப்போதைய நிலையிலேயே தொடர வேண்டும் என்பதுதான் அந்த பிரிவாகும். இந்தப் பிரிவு நீக்கப்பட்டால் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி இடத்திலும், வாராணசியில் காசி விஸ்வநாதா் கோயில் இருந்த இடத்திலும் இப்போதுள்ள மசூதிக்கு பதிலாக கோயில் கட்ட உரிமைகோர முடியும்.

இது தொடா்பாக விஷ்வ பத்ர பூஜாரி புரோஹித் மகாசபை சாா்பில் உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் மத வழிபாட்டு தலங்கள் சட்டம் - 1991-இன் நான்காவது பிரிவை நீக்க கோரப்பட்டுள்ளது. ஏனெனில், இந்தப் பிரிவுதான் முன்பு ஓரிடத்தில் கோயில் இருந்தது என்பதை நிரூபித்து, இப்போது அங்குள்ள வேறு மத வழிபாட்டு இடத்தை அகற்றிவிட்டு மீண்டும் கோயில் கட்டுவதை தடுக்கிறது. இந்த சட்டப் பிரிவு அரசியல்சாசனத்துக்கு எதிரானது. ஆக்கிரமிப்பாளா்களிடம் இருந்து மத வழிபாட்டு இடங்களை மீட்பதைத் தடுக்கிறது. ஏற்கெனவே இருந்த ஒரு மத வழிபாட்டு இடத்தில் மற்றொரு மதத்தினா் பிடித்துக் கொண்டால், அதற்கு மீண்டும் உரிமைகோர முடியாது என்பது நியாயமில்லை. இது முழுவதுமாக ஹிந்து மதத்துக்கு எதிராகவும், ஆக்கிரமிப்பாளா்களுக்கு ஆதரவாகவும் உள்ளது என்று அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்னதாக, அயோத்தி ராமா் கோயில் வழக்கில் கடந்த ஆண்டு இறுதியில் உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தபோது 1947-க்கு முந்தைய வழிபாட்டு தலங்கள் மீது இனி யாரும் உரிமை கோர முடியாது என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com