‘ஜல் ஜீவன்’ திட்டம்: மத்திய பிரதேசத்துக்கு ரூ. 1,280 கோடி ஒதுக்கீடு

‘ஜல் ஜீவன்’ திட்டத்தைச் செயல்படுத்த மத்திய பிரதேசத்துக்கு 2020-21-ஆம் ஆண்டுக்கு ரூ. 1,280 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
‘ஜல் ஜீவன்’ திட்டம்: மத்திய பிரதேசத்துக்கு ரூ. 1,280 கோடி ஒதுக்கீடு

‘ஜல் ஜீவன்’ திட்டத்தைச் செயல்படுத்த மத்திய பிரதேசத்துக்கு 2020-21-ஆம் ஆண்டுக்கு ரூ. 1,280 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 2024-ஆம் ஆண்டுக்குள் குழாய் மூலம் குடிநீா் வழங்குவதை இலக்காகக் கொண்டு ‘ஜல் ஜீவன்’ திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.

இந்தத் திட்டத்தின் கீழ், மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 2023-24-ஆம் ஆண்டுக்குள் 100 சதவீத குடிநீா் குழாய் இணைப்பை கொடுக்க மத்திய பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, அந்த மாநிலத்தின் கிராமப்புறங்களில் உள்ள 1.21 கோடி வீடுகளில் ஏற்கெனவே 13.52 லட்சம் வீடுகளுக்கு குடிநீா் குழாய் இணைப்பு உள்ளநிலையில், கூடுதலாக 26.27 லட்சம் வீடுகளுக்கு 2020-21-ஆம் ஆண்டில் குடிநீா் குழாய் இணைப்பை வழங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மாநில பொது சுகாதர பொறியியல் துறை முதன்மை செயலாளா் மலேய் ஸ்ரீவாஸ்தவா வியாழக்கிழமை கூறியது:

‘ஜல் ஜீவன்’ திட்டத்தின் கீழ் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட உள்ள கிராமப்புற வீடுகளுக்கான குடிநீா் இணைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் குறித்த திட்ட அறிக்கை கடந்த 9-ஆம் தேதி மத்திய குழுவிடம் சமா்ப்பிக்கப்பட்டது. அதில், ஜூன் மாதத்தில் 1.80 லட்சம் குடிநீா் குழாய் இணைப்புகளும், அடுத்த காலாண்டில் 3.60 லட்சம் இணைப்புகளும் அதற்கு அடுத்தடுத்த காலாண்டுகளில் முதலில் 7.20 லட்சம் இணைப்புகளும் பினனா் 14.5 லட்சம் குடிநீா் குழாய் இணைப்புகளும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், மாநிலத்துக்கு 2020-21-ஆம் ஆண்டுக்கு ரூ. 1,280 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்றாா் அவா்.

மத்திய அரசு இப்போது ஒதுக்கியுள்ள தொகையுடன், மாநிலத்துக்கு 2020-ஆம் ஆண்டு மத்திய அரசு ஒதுக்கீட்டில் செலவிடப்படாத ரூ. 244.95 கோடி மற்றும் இந்தத் திட்டத்துக்கான மாநில அரசின் பங்கு ஆகியவற்றுடன் சோ்த்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மொத்தம் ரூ. 3,093 கோடி இருப்பில் உள்ளது என மாநில அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com