சர்ச்சையை ஏற்படுத்திய பெங்களூரு காவல் ஆய்வாளரின் ‘ஜெய் ஹிந்த்’ சுற்றறிக்கை!

காவல்துறை வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய பெங்களூரு காவல் ஆய்வாளர் ஒருவரின் ‘ஜெய் ஹிந்த்’ சுற்றறிக்கை விலக்கிக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பெங்களூரு: காவல்துறை வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய பெங்களூரு காவல் ஆய்வாளர் ஒருவரின் ‘ஜெய் ஹிந்த்’ சுற்றறிக்கை விலக்கிக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பெங்களூரு நகர காவல் ஆய்வாளர் ஒருவர் தனது காவல் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் சமீபத்தில் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் கீழ்மட்ட காவலர்கள் இனி தங்களது உயர் அதிகாரிகளுக்கு வணக்கம் சொல்லிவிட்டு ‘ஜெய் ஹிந்த்’ என்று கூற வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதுபோல காவலர் நடத்தை விதிமுறைகளில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதால், அவரது இந்த சுற்றறிக்கை முதலில் காவல்துறை வட்டாரத்தில் பரவி, பிறகு வெளியிலும் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சர்ச்சையை ஏற்படுத்திய பெங்களூரு காவல் ஆய்வாளரின் ‘ஜெய் ஹிந்த்’ சுற்றறிக்கை விலக்கிக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக பெயர் குறிப்பிட விரும்பாத காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், நாங்கள் அவரிடம் இதுபோல் எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம் என்று தெரிவித்துள்ளோம். அவர் தன்னிச்சையாக இவ்வாறு செயல்பட்டுள்ளார். நாட்டின் சில பகுதிகளில் உள்ள காவல்துறைகள் மற்றும் ஒரு சில துணை ராணுவ பிரிவுகளில் பின்பற்றப்படும் நடைமுறையை ஒட்டி அவர் இவ்வாறு செயல்பட்டுள்ளார்.அவர் எந்த ஒரு துறைரீதியிலான விதிமுறையையும் மீறவில்லை என்றாலும், தேவை இல்லாத சர்ச்சையை தனது நடவடிக்கையால் உருவாக்கி விட்டார்’ என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com