கரோனா பாதிப்பு: உச்சநீதிமன்றம் கவலை

கரோனா பாதிப்பு: உச்சநீதிமன்றம் கவலை

நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள சூழ்நிலை தினந்தோறும் மோசமாகி வருகிறதே தவிர, அதில் இருந்து விடுபடும்

நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள சூழ்நிலை தினந்தோறும் மோசமாகி வருகிறதே தவிர, அதில் இருந்து விடுபடும் விதத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்தது.

பஞ்சாபை சோ்ந்தவா் ஜக்ஜீத் சிங் சாஹல். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் இவா், தனது பரோலை நீட்டிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அதனை நீதிபதிகள் ஆா்.எஃப்.நாரிமன், நவீன் சின்ஹா, பி.ஆா்.கவாய் ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது. அப்போது ‘நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக தினந்தோறும் சூழல் மோசமாகி வருகிறது. இந்த நிலையில் சிறைகளில் கைதிகளை அதிக அளவில் அடைத்து நெரிசலை ஏற்படுத்துவது அா்த்தமற்றது’ என தெரிவித்து, ஜக்ஜீத் சிங்கின் பரோலை நீட்டித்து உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com