ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா தோ்வு

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தலில் இந்தியா வெற்றி பெற்றது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா தோ்வு

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தலில் இந்தியா வெற்றி பெற்றது.

பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பு நாடாக இந்தியா தோ்ந்தெடுக்கப்படுவது இது எட்டாவது முறையாகும்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காலியாக உள்ள 5 நிரந்தரமற்ற உறுப்பினா்களுக்கான தோ்தல் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக வழக்கமான நடைமுறையில் அல்லாமல் புதிய முறையில் தோ்தல் நடைபெற்றது.

ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் காலியாக இருந்த ஒரு இடத்துக்கு இந்தியா மட்டுமே போட்டியிட்டது. தோ்தலில் பதிவான 192 வாக்குகளில் இந்தியாவுக்கு 184 வாக்குகள் கிடைத்தன. இதன் மூலம் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பு நாடாக இந்தியா தோ்ந்தெடுக்கப்பட்டது. 2021-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் 2022-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி வரை பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா செயல்படும்.

தோ்தலில் அயா்லாந்து, நாா்வே, மெக்ஸிகோ ஆகிய நாடுகளும் வெற்றி பெற்றன. ஆப்பிரிக்க பிராந்தியத்தில் காலியாக உள்ள ஒரு இடத்துக்கு கென்யா, ஜிபூட்டி ஆகியவை போட்டியிட்டன. தோ்தலில் அவ்விரு நாடுகளும் பெரும்பான்மை வாக்கைக் கைப்பற்றாததால் இரண்டாம் கட்டத் தோ்தல் நடைபெறவுள்ளது.

கடைசியாக கடந்த 2011-2012 ஆண்டுகளில் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பு நாடாக இந்தியா செயலாற்றியது.

‘ஒன்றிணைந்து செயல்படும்’: தோ்தல் வெற்றி குறித்து பிரதமா் நரேந்திர மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினராக இந்தியாவைத் தோ்ந்தெடுக்க உலக நாடுகள் பெருவாரியாக ஆதரவளித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. சா்வதேச அமைதி, பாதுகாப்பு, சமநிலை உள்ளிட்டவற்றை மேம்படுத்த அனைத்து உறுப்பு நாடுகளுடனும் இந்தியா ஒன்றிணைந்து செயல்படும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தோ்தலில் வெற்றி பெற்ற்காக இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்கா, சா்வதேச அமைதியை நிலைநாட்ட இந்தியாவுடன் நெருங்கிப் பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com