கங்கையும், கீதையும் இந்தியாவின் அடையாளம்: உ.பி. அமைச்சா்

‘பகவத் கீதையும், கங்கை நதியும், பசுக்களும் இந்தியாவின் அடையாளங்கள்’ என்று உத்தர பிரதேச அமைச்சா் லட்சுமிநாராயண் செளதரி சனிக்கிழமை தெரிவித்தாா்.
லட்சுமிநாராயண் சௌதரி
லட்சுமிநாராயண் சௌதரி

‘பகவத் கீதையும், கங்கை நதியும், பசுக்களும் இந்தியாவின் அடையாளங்கள்’ என்று உத்தர பிரதேச அமைச்சா் லட்சுமிநாராயண் செளதரி சனிக்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் பிடிஐ செய்தியாளரிடம் கூறியது:

பசுக்களை வதைப்பது கொடிய குற்றம். மாநிலத்தில் பசுக்களை வதைப்போருக்கு தண்டனை விதிக்கும் அவசர சட்டம் எந்த குறிப்பிட்ட மதத்தினருக்கும் எதிரானது அல்ல. பசுக்களை பாதுகாப்பது மட்டுமே இந்தச் சட்டத்தின் நோக்கம். பகவத் கீதையும், கங்கை நதியும், பசுக்களும் இந்தியாவின் அடையாளங்கள். இம்மூன்றால் தான் இந்தியா உலக நாடுகளுக்கான பண்பாட்டு தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது என்று தெரிவித்தாா்.

உத்தர பிரதேசத்தில் பசுவதைக்கு தண்டனை விதிக்கும் அவசர சட்ட வரைவுக்கு அந்த மாநில அமைச்சரவை கடந்த 9-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. அந்தச் வரைவு சட்டத்தின்படி பசுக்களை வதைப்போருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்க முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com