கல்வான் பகுதிக்கு உரிமை கோரும் சீன முயற்சி: இந்தியா நிராகரிப்பு

எல்லையில் ​கிழக்கு லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்கு சீனா உரிமை கோருவதை, ஏற்கவே முடியாதென திட்டவட்டமாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது.
கிழக்கு லடாக் பகுதியிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கு
கிழக்கு லடாக் பகுதியிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கு


எல்லையில் ​கிழக்கு லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்கு சீனா உரிமை கோருவதை, ஏற்கவே முடியாதென திட்டவட்டமாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது.

இதுபற்றி இந்திய வெளியுறவுத் துறைப் பேச்சாளர்  அனுராக் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்ததாவது:

"கல்வான் பள்ளத்தாக்கு பற்றிய நிலைப்பாடு வரலாற்று ரீதியாக தெளிவாக உள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி தொடர்பாக மிகைப்படுத்தப்பட்ட மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத கூற்றுகளை முன்வைக்க சீனா மேற்கொள்ளும் முயற்சிகள் ஏற்கத்தக்கவையல்ல. இவை கடந்த காலங்களில் சீனாவின் சொந்த நிலைப்பாட்டுக்கே பொருந்துவதல்ல.

மற்ற இடங்களில் செய்வதைப் போலவே இங்கும் அவர்கள் நடந்துகொள்கிறார்கள். எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியைத் தாண்டி இந்தியத் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. சொல்லப்போனால், அவர்கள் இந்தப் பகுதியில் நீண்ட காலமாக ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வேறு எதுவும் நிகழவில்லை.

இதுபோன்று மேற்கொள்ளப்படும் சீனாவின் ஒவ்வொரு அத்துமீறல் முயற்சிக்கும் இந்தியத் தரப்பிலிருந்து தகுந்த பதிலடி தரப்பட்டுள்ளது."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com