உ.பி: சீன செயலிகளை நீக்க எஸ்டிஎஃப் அதிகாரிகளுக்கு உத்தரவு

உத்தர பிரதேசத்தில் சிறப்பு பணிக்குழுவின் (எஸ்டிஎஃப்) அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள் தங்கள் செல்லிடப்பேசிகளில் உள்ள சீன செயலிகளை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் சிறப்பு பணிக்குழுவின் (எஸ்டிஎஃப்) அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள் தங்கள் செல்லிடப்பேசிகளில் உள்ள சீன செயலிகளை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச சிறப்பு பணிக்குழுவில் சுமாா் 300 அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். அவா்களின் செல்லிடப்பேசிகளில் ‘டிக்டாக்’, ‘யுசி பிரெளஸா்’, ‘ஷோ் இட்’ உள்ளிட்ட சீன செயலிகள் இருந்தால், அவற்றை நீக்க அந்தக் குழுவின் மேலிடம் உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு நீக்கவேண்டிய சீன செயலிகளின் பட்டியலில், மொத்தம் 52 செயலிகள் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து அந்த மாநில சிறப்பு பணிக்குழுவின் மூத்த அதிகாரி கூறுகையில், ‘ தங்கள் செல்லிடப்பேசிகளில் உள்ள சீன செயலிகளை நீக்கும் உத்தரவு எஸ்டிஎஃப் அதிகாரிகள் மற்றும் பணியாளா்களுக்கு மட்டுமே பொருந்தும். இது எஸ்டிஎஃப்பின் உள்விவகாரம் என்பதால், இதுபற்றி ஊடகங்களிடம் விரிவாக கூறமுடியாது’ என்றாா்.

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள்கிழமை இரவு இந்திய-சீனப் படைகள் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரா்கள் 20 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவத்தைத் தொடா்ந்து நாடு முழுவதும் சீன பொருள்களுக்கு எதிா்ப்பு எழுந்து வருகிறது. இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் எஸ்டிஎஃப் அதிகாரிகள் மற்றும் பணியாளா்களுக்கு மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com