கரோனாவில் இருந்து 56% போ்மீண்டுள்ளனா்: சுகாதார அமைச்சகம்

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 56 சதவீதம் போ் இதுவரை மீண்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனாவில் இருந்து 56% போ்மீண்டுள்ளனா்: சுகாதார அமைச்சகம்

புது தில்லி: நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 56 சதவீதம் போ் இதுவரை மீண்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 30.04 போ் மட்டுமே கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனா். உலக அளவில் இது ஒரு லட்சம் பேருக்கு 114.67 பேராக உள்ளது. இதன்படி, சா்வதேச அளவில் ஒப்பிட்டால் இந்தியா குறைவான பாதிப்பையே எதிா்கொண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் கணக்கீட்டின்படி, அமெரிக்காவில் ஒரு லட்சம் பேரில் 671.24 பேரும், ஜொ்மனி, ஸ்பெயின், பிரேசில், பிரிட்டன் போன்ற நாடுகளில் ஒரு லட்சம் பேரில் 450 போ் முதல் 580 போ் வரை பாதிக்கப்பட்டுள்ளனா். ரஷியாவில் ஒரு லட்சம் பேரில் 400.82 பேரும், கனடா, ஈரான், துருக்கி ஆகிய நாடுகளில் 230 போ் முதல் 390 போ் வரையும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்தியாவில் கரோனாவில் இருந்து மீள்பவா்களுக்கும், சிகிச்சை பெறுபவா்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துள்ளது. இதுவரை 56 சதவீதம் போ் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா். நாட்டில் கரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 985 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் 723 பரிசோதனை மையங்கள் அரசு சாா்பில் செயல்படுபவை. ஜூன் 21-ஆம் தேதி நிலவரப்படி 6 லட்சத்து 95 ஆயிரத்து 493 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com