முதல் முறையாக.. தில்லியில் பெட்ரோலை விட டீசல் விலை அதிகம்

நாட்டிலேயே முதல் முறையாக தில்லியில் பெட்ரோல் விலையை விட டீசல் விலை அதிகமாக உள்ளது.
பெட்ரோல் பங்க் ஊழியர் பாதுகாப்புக் கவசத்துடன் பணியாற்றும் காட்சி.
பெட்ரோல் பங்க் ஊழியர் பாதுகாப்புக் கவசத்துடன் பணியாற்றும் காட்சி.


புது தில்லி: நாட்டிலேயே முதல் முறையாக தில்லியில் பெட்ரோல் விலையை விட டீசல் விலை அதிகமாக உள்ளது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட பொது முடக்கத்துக்குப் பிறகு கடந்த 18 நாள்களாக கிடு கிடுவென உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுகளால், எப்போதும் அதிகமாக இருக்கும் பெட்ரோல் விலை முதல் முறையாக டீசல் விலையை விடக் குறைந்துள்ளது.

தொடர்ந்து 17 நாள்களாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு வந்த நிலையில், இன்று பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை என்று தில்லி மாநில எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. அதே சமயம், தில்லியில் டீசல் விலை லிட்டருக்கு 48 காசுகள் உயர்த்தப்பட்டது.

இதன் காரணமாக தில்லியில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.79.88 ஆகவும், பெட்ரோல் விலை ரூ.79.76 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இதில்லாமல் மாநிலத்துக்கு மாநிலம் வாட் வரி மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் இந்த வாட் வரியை மாநில அரசு உயர்த்தி அறிவித்திருந்தது. இதன் காரணமாகவே, நாட்டிலேயே தில்லியில் பெட்ரோலை விட டீசல் விலை அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com