ஆந்திர மாநிலத்தில் தனியார் தொழிற்சாலையில் எரிவாயு கசிவு: ஒருவர் பலி, 2 பேர் கவலைக்கிடம்

ஆந்திர மாநிலத்தில் தனியார் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாக ஒருவர் பலியானார். 
ஆந்திர மாநிலத்தில் தனியார் தொழிற்சாலையில் எரிவாயு கசிவு: ஒருவர் பலி, 2 பேர் கவலைக்கிடம்

ஆந்திர மாநிலத்தில் தனியார் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாக ஒருவர் பலியானார். 

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தின் நந்தியாலா நகரில் ஸ்பை அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் என்ற தொழிற்சாலை இயங்கி வருகிறது. இன்று காலை தொழிற்சாலையில் எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக ஒரு குழாயில் இருந்து அமோனியா எரிவாயு கசிவு ஏற்பட்டது.

இதில் நிறுவனத்தின் பொது மேலாளர் எரிவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.மேலும் 4 பேர் மருத்துவனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கர்னூல் மாவட்ட ஆட்சியர் வீரபாண்டியன் தெரிவிக்கையில், எரிவாயு நிறுவனத்திற்குள் மட்டுமே பரவியது, வெளியே அல்ல.

எனவே, மக்கள் பீதியடைய தேவையில்லை என்றார். அண்மையில் ஆந்திராவின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள எல்ஜி பாலிமர்ஸ் என்ற ரசாயன ஆலையில் ஏற்பட்ட எரிவாயுக் கசிவு காரணமாக 11 பேர் பலியான நிலையில் தற்போது மீண்டும் ஒரு தொழிற்சாலையில் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com