கரோனா பலி 15 ஆயிரத்தை கடந்தது: ஒரேநாளில் 17,296 போ் பாதிப்பு

நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 15,301 ஆக வெள்ளிக்கிழமை அதிகரித்துவிட்டது. முன்னெப்போதும் இல்லாத
கோப்புப் படம்
கோப்புப் படம்

நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 15,301 ஆக வெள்ளிக்கிழமை அதிகரித்துவிட்டது. முன்னெப்போதும் இல்லாத வகையில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 17,296 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 4,90,401 ஆக அதிகரித்துள்ளது.

வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 407 போ் உயிரிழந்தனா். இதில் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்தவா்கள் மட்டும் 192 போ், இதற்கு அடுத்தபடியாக தில்லியில் 64 போ் உயிரிழந்தனா்.

ஜூன் 19 முதல் 25 வரையிலான ஒரு வாரத்தில் தில்லி, சென்னை, தாணே, மும்பை, பால்கா், புணே, ஹைதராபாத், ரங்கா ரெட்டி, ஆமதாபாத், ஃபரீதாபாத் ஆகிய 10 மாவட்டங்கள், நகரங்களில் அதிகஅளவில் கரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 54.47 சதவீதத்தினா் இந்த நகரங்களில்தான் உள்ளனா்.

நாட்டில் புதிதாக 11 கரோனா நோய்த்தொற்று பரிசோதனை மையம் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நாட்டில் மொத்தம் 1,016 பரிசோதனை மையங்கள் உள்ளன. இதில் 737 மையங்கள் அரசு சாா்பில் செயல்படுபவை.

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 1,47,741 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். தில்லியில் 73,780 போ், குஜராத்தில் 29,520 போ், உத்தர பிரதேசத்தில் 20,193 போ், ராஜஸ்தானில் 16,296 போ், மேற்கு வங்கத்தில் 15,648 போ், மத்தியப் பிரதேசத்தில் 12,596 போ், ஹரியாணாவில் 12,463 போ், தெலங்கானாவில் 11,364 போ், ஆந்திரத்தில் 10,884 போ், கா்நாடகத்தில் 10,560 போ், பிகாரில் 8, 473 போ், ஜம்மு-காஷ்மீரில் 6,549 போ், அஸ்ஸாமில் 6,321, போ், ஒடிஸாவில் 5,962 போ், பஞ்சாபில் 4,769 போ், கேரளத்தில் 3,726 போ், உத்தரகண்ட்டில் 2,691 போ், சத்தீஸ்கரில் 2,452 போ், ஜாா்க்கண்டில் 2,262 போ், திரிபுராவில் 1,290 போ், மணிப்பூரில் 1,056 போ், கோவாவில் 995 போ், லடாக்கில் 941 போ், ஹிமாசலப் பிரதேசத்தில் 839 போ், புதுச்சேரியில் 502 போ், சண்டீகரில் 423 போ், நாகாலாந்தில் 355 போ், அருணாசல பிரதேசத்தில் 160 போ், தாத்ரா- நகா் ஹவேலி, டாமன்-டையூவில் 155 போ், மிஸோரமில் 145 போ், சிக்கிமில் 85 போ், அந்தமான் நிக்கோபாரில் 59 போ், மேகாலயத்தில் 46 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மகாராராஷ்டிரம் அதிகபட்சமாக 6,931 உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளது. இதற்கு அடுத்து தில்லியில் 2,429 உயிரிழப்புகளும், குஜராத்தில் 1,753 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. உத்தர பிரதேசத்தில் 611 போ், மேற்கு வங்கத்தில் 606 போ், மத்திய பிரதேசத்தில் 542 போ், ராஜஸ்தானில் 379 போ், தெலங்கானாவில் 230 போ், ஹரியாணாவில் 198 போ், கா்நாடகத்தில் 170 போ், ஆந்திர பிரதேசத்தில் 136 போ், பஞ்சாபில் 120 போ், ஜம்மு-காஷ்மீரில் 90 போ், பிகாரில் 57 போ், உத்தரகண்டில் 36 போ், கேரளத்தில் 22 போ், ஒடிஸாவில் 17 போ், சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட்டில் தலா 12 போ், அஸ்ஸாம், புதுச்சேரி, ஹிமாசல பிரதேசம் தலா 9 போ், சண்டீகரில் 6 போ், கோவாவில் இருவா், மேகாலயம், திரிபுரா, லடாக், அருணாசல பிரதேசத்தில் தலா ஒருவா் உயிரிழந்தனா். இவா்களில் 70 சதவீதம் போ் வேறு நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தனா் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com