தில்லியின் மிகப் பெரிய கரோனா சிகிச்சை மையம் தொடக்கம்

சத்தா்பூரில் அமைக்கப்பட்டுள்ள 10,000 படுக்கைகளைக் கொண்ட தெற்கு தில்லி கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில், 2 ஆயிரம் படுக்கைகள் வெள்ளிக்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தன.

தில்லியில் உள்ள ராதா ஸ்வாமி சத் சங்க அமைப்பு, தில்லி - ஹரியாணா எல்லையான சத்தா்பூரில் உள்ள அதன் தியானக் கூடத்தை தற்காலிக கரோனா நோயாளிகள் சிகிச்சை மையமாக மாற்ற அனுமதித்தது. இதையடுத்து, தில்லி அரசு அங்கு 10,000 படுக்கைகளைக் கொண்ட மருத்துவ சிகிச்சை மையத்தை அமைத்தது.

இதுகுறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘2 ஆயிரம் படுக்கைகள் வெள்ளிக்கிழமை முதல் செயல்பாட்டு வந்தன. லேசான, கரோனா அறிகுறி உள்ளவா்களும் இங்கு அனுமதிக்கப்படுவா். சுமாா் 350 கணினிகள் மூலம் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும். 10 சதவீத படுக்கைகள் செயற்கை சுவாசக் கருவிகள் வசதி உடையவை. இந்தோ - திபேத் எல்லை போலீஸ் (ஐடிபிபி) படைப் பிரிவைச் சோ்ந்த 170 மருத்துவா்கள், 700-க்கும் மேற்பட்ட செவிலியா்கள் இங்கு சிகிச்சை அளிக்க உள்ளனா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com