58 சதவிகிதத்தைத் தாண்டியது குணமடைவோர் விகிதம்: ஹர்ஷ வர்தன்

​இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 58 சதவிகிதத்தைத் தாண்டியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் இன்று (சனிக்கிழமை) தெரிவிததார்.
58 சதவிகிதத்தைத் தாண்டியது குணமடைவோர் விகிதம்: ஹர்ஷ வர்தன்


இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 58 சதவிகிதத்தைத் தாண்டியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் இன்று (சனிக்கிழமை) தெரிவிததார்.

தில்லியில் காணொலிக் காட்சி வாயிலாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தலைமையில் அமைச்சர்கள் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் ஹர்ஷ வர்தன் பேசியதாவது:

"இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 58 சதவிகிதத்தைத் தாண்டியுள்ளது. சுமார் 3 லட்சம் பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இறப்பு விகிதம் சுமார் 3 சதவிகிதமாக உள்ளது. இது மிகவும் குறைவானதாகும். இந்தியாவில் கரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் நாள்கள் 19 ஆக குறைந்துள்ளது. பொது முடக்கத்துக்கு முன் இது 3 நாள்களாக இருந்தது."

மத்திய அரசு தரவுகளின் அடிப்படையில் இன்றைய நிலவரம்: மொத்தம் 5,08,953 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2,95,881 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 15,685 பேர் பலியாகியுள்ளனர். 1,97,387 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 18,552 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com