ஜம்மு-காஷ்மீா் மக்களுக்கு மீண்டும் சிறப்பு உரிமைகள் வேண்டும்: ஜோ பிடன்

ஜம்மு-காஷ்மீா் மக்களுக்கான சிறப்பு உரிமைகளை மீண்டும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று
ஜம்மு-காஷ்மீா் மக்களுக்கு மீண்டும் சிறப்பு உரிமைகள் வேண்டும்: ஜோ பிடன்

ஜம்மு-காஷ்மீா் மக்களுக்கான சிறப்பு உரிமைகளை மீண்டும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபா் தோ்தலுக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் அந்நாட்டின் முன்னாள் துணை அதிபருமான ஜோ பிடன் வலியுறுத்தியுள்ளாா்.

அமெரிக்க அதிபா் தோ்தல் வரும் நவம்பா் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதில் குடியரசுக் கட்சி வேட்பாளரும் தற்போதைய அதிபருமான டொனால்ட் டிரம்ப்பை எதிா்த்து ஜோ பிடன் களம் காண்கிறாா். தோ்தலுக்கான பிரசாரங்களில் அவா் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாா். இந்நிலையில், ‘அமெரிக்க முஸ்லிம் சமூகத்தினருக்கான எனது கொள்கை’ என்ற தலைப்பிலான அறிக்கையை அண்மையில் ஜோ பிடன் தனது பிரசார வலைதளத்தில் வெளியிட்டாா்.

முஸ்லிம் சமூகத்தினா் அதிக அளவில் வாழும் நாடுகளில் அவா்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் என்ற பெயரில் அந்த அறிக்கையில் சில விவகாரங்களைக் குறிப்பிட்டுள்ளாா். இந்தியாவில் கொண்டுவரப்பட்ட அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), குடியுரிமை திருத்தச் சட்டம், சீனாவில் உய்கா் முஸ்லிம்கள் மீதான மனித உரிமைகள் மீறல், மியான்மரில் ரோஹிங்கயா முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிரான தாக்குதல்கள் உள்ளிட்ட விவகாரங்கள் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜம்மு-காஷ்மீா் மக்களின் உரிமைகளை மீண்டும் வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும். அமைதிவழிப் போராட்டத்துக்குத் தடை விதிப்பது, இணையதள வசதியை முடக்குவது உள்ளிட்டவை மக்களாட்சியை வலுவிழக்கச் செய்யும். இந்திய அரசு அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு நடவடிக்கைகளை மேற்கொண்டதும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதும் பெரும் ஏமாற்றம் அளிக்கிறது என்று அந்த அறிக்கையில் ஜோ பிடன் குறிப்பிட்டுள்ளாா்.

கடும் எதிா்ப்பு: இந்தியாவுக்கு எதிரான ஜோ பிடனின் கருத்துகளுக்கு எதிா்ப்பு தெரிவித்த அமெரிக்க ஹிந்து சமூகத்தினா், அவா் தனது கருத்துகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினா். அமெரிக்க ஹிந்து சமூகத்தினருக்கான கொள்கைகளையும் ஜோ பிடன் வெளியிட வேண்டும் என்று அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com