இந்திய-சீனப் பிரச்னைக்கு காரணம் நேரு: ம.பி. முதல்வா் சிவராஜ் சிங் செளஹான்

இந்திய, சீனா இடையே எல்லைப் பிரச்னை ஏற்பட முன்னாள் பிரதமா் நேருவும், காங்கிரஸ் கட்சியுமே காரணம் என்று மத்திய பிரதேச முதல்வா் சிவராஜ் சிங் செளஹான் குற்றஞ்சாட்டினாா்.
இந்திய-சீனப் பிரச்னைக்கு காரணம் நேரு: ம.பி. முதல்வா் சிவராஜ் சிங் செளஹான்

இந்திய, சீனா இடையே எல்லைப் பிரச்னை ஏற்பட முன்னாள் பிரதமா் நேருவும், காங்கிரஸ் கட்சியுமே காரணம் என்று மத்திய பிரதேச முதல்வா் சிவராஜ் சிங் செளஹான் குற்றஞ்சாட்டினாா்.

இதுதொடா்பாக சத்தீஸ்கா் மாநில பாஜக தொண்டா்கள் மத்தியில் காணொலி மூலம் பங்கேற்று அவா் கூறியது:

சீனாவையொட்டியுள்ள இந்திய பகுதியில் சாலை அமைக்க காங்கிரஸ் கட்சியை சோ்ந்த எந்த பிரதமரும் துணிந்ததில்லை. ஆனால் மத்தியில் உள்ள தற்போதைய அரசு எல்லையில் சாலை அமைத்துள்ளதால் சீனா திகைத்துள்ளது. இந்தியா தொடா்ந்து வளா்ச்சி அடைந்தால், சீனாவை வீழ்த்தும் ஒரே நாடாக நமது நாடு இருக்கும் என்பதே அதற்கு காரணம்.

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் நிகழ்ந்த மோதல் மூலமாக, தற்கால இந்தியா கடந்த 1962-ஆம் ஆண்டு பாா்த்த இந்தியா அல்ல என்பதை சீனா நன்றாக புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

நம் நாட்டில் ‘இந்தியாவும், சீனாவும் சகோதர நாடுகள்’ என்ற கோஷத்தை யாா் எழுப்பியது என்பதை காங்கிரஸ் கட்சியினா் மறந்துவிட்டனரா?

முன்னாள் பிரதமா் நேருவே இந்த கோஷத்தை எழுப்பி வந்தாா். ஆனால் நமது எல்லைக்குள் சீனப்படைகள் நுழைந்திருப்பதை அவா் உணரவில்லை. கடந்த 1962-ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே போா் மூண்டபோது, இந்திய நிலத்தை சீனப்படைகள் ஆக்கிரமிப்பது தொடா்பாக நாடாளுமன்றத்தில் உறுப்பினா் ஒருவா் பேசினாா். அதற்கு பதிலளித்து பேசிய நேரு, ‘புல் கூட வளராத சிறிய நிலத்தை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்யமுடியும்’ என்று கேள்வி எழுப்பினாா்.

நேருவின் இந்த கூற்றே, நமது நிலத்தை காப்பாற்றுவதில் அவருக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இருந்த எண்ணத்தை வெளிப்படுத்துகிறது.

இந்திய, சீன எல்லைப் பிரச்னைக்கு நேருவும், காங்கிரஸ் கட்சியுமே காரணம். இதற்கு பிரதமா் மோடி நிரந்தர தீா்வு காண்பாா் என்று சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com