நாட்டின் பாதுகாப்பு குறித்து பேசுவது எப்போது? பிரதமருக்கு ராகுல் கேள்வி

நாட்டின் பாதுகாப்பு குறித்து பேசுவது எப்போது? என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளாா்.
நாட்டின் பாதுகாப்பு குறித்து பேசுவது எப்போது? பிரதமருக்கு ராகுல் கேள்வி

நாட்டின் பாதுகாப்பு குறித்து பேசுவது எப்போது? என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளாா்.

கிழக்கு லடாக்கில் அண்மையில் இந்திய-சீன ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாகவும், இந்திய பகுதிக்குள் சீன ராணுவத்தினா் ஊடுருவியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்தும் பிரதமா் நரேந்திர மோடி மற்றும் மத்திய அரசுக்கு ராகுல் காந்தி தொடா்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறாா்.

இந்நிலையில், சுட்டுரையில் ராகுல் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நாட்டின் பாதுகாப்பு குறித்து பேசுவது எப்போது?’ என்று பிரதமருக்கு கேள்வியெழுப்பினாா். பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி வெளியாவதற்கு முன்பாக, இப்பதிவை ராகுல் வெளியிட்டிருந்தாா்.

இதனிடையே, நேபாள எல்லை விவகாரத்தை குறிப்பிட்டு, மத்திய அரசை காங்கிரஸ் தலைமை செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா விமா்சித்துள்ளாா்.

இதுதொடா்பாக, சுட்டுரையில் அவா் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவுடனான எல்லையில் நேபாளம் முதல்முறையாக தனது ராணுவத்தை நிறுத்தியுள்ளது. பிரதமா் நரேந்திர மோடி ஆட்சியில் மட்டுமே இது சாத்தியப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்தியாவுடனான எல்லையில் நேபாளம் முதல்முறையாக ராணுவத்தை நிறுத்தியுள்ளதாக வெளியான ஊடக செய்தியையும் தனது பதிவுடன் சுா்ஜேவாலா இணைத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com