நாட்டின் சராசரியை விட தில்லியில் குணமடைவோர் விகிதம் உயர்வு

தில்லியில் கரோனா பாதித்து குணமடைவோர் விகிதம் ஜூன் 29-ம் தேதி நிலவரப்படி 66.03% ஆக உயர்ந்துள்ளது, இது நாட்டின் குணமடைவோர் சராசரியான 58.67%-ஐ விட அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சராசரியை விட தில்லியில் குணமடைவோர் விகிதம் உயர்வு
நாட்டின் சராசரியை விட தில்லியில் குணமடைவோர் விகிதம் உயர்வு


புது தில்லி: தில்லியில் கரோனா பாதித்து குணமடைவோர் விகிதம் ஜூன் 29-ம் தேதி நிலவரப்படி 66.03% ஆக உயர்ந்துள்ளது, இது நாட்டின் குணமடைவோர் சராசரியான 58.67%-ஐ விட அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தில் தில்லியில் 64 ஆயிரம் பேருக்கு புதிதாக கரோனா பாதித்தது என்றால், அதில் 47,357 பேர் குணமடைந்துள்ளனர்.  இதனால், ஜூன் 20-ம் தேதி தில்லியில் குணமடைவோர் விகிதம் 50% எட்டியது.

ஒரு பக்கம் மும்பையை விட கரோனா பாதிப்பில் தில்லி முதலிடம் வகித்த போதும், மறுபக்கம், குணமடைவோர் விகிதமும் அதிகரித்தது. 

ஜூன் 19-ல் தில்லியின் குணமடைவோர் விகிதம் 44.37% இருந்த நிலையில், இது அடுத்த நாளே 55.14% ஆக உயர்ந்தது. அது முதல் தொடர்ந்து குணமடைவோர் விகிதம் உயர்ந்து வந்தது. தொடர்ந்து உயர்ந்து 60% ஐ எட்டியது.  தொடர்ந்து ஜூன் 29-ம் தேதி இது 66.03% ஆக உயர்ந்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com