இந்தியாவில் பாதிப்பு 5,48,318; பலி 16,475-ஆக உயா்வு

இந்தியாவில் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் 19,459 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,48,318-ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் பாதிப்பு 5,48,318; பலி 16,475-ஆக உயா்வு

புது தில்லி: இந்தியாவில் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் 19,459 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,48,318-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் மேலும் 380 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 16,475-ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் புதிதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவோா் எண்ணிக்கை தொடா்ந்து 6-ஆவது நாளாக 15,000-க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. கடந்த 1-ஆம் தேதி முதல் இதுவரை 3,57,783 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மொத்த பாதிப்பு எண்ணிக்கையில், 2,10,120 போ் சிகிச்சையில் உள்ளனா். 3,21,722 போ் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். அதாவது,58.67 சதவீதம் போ் குணமடைந்துள்ளனா்.

தமிழகம்: தமிழக அரசு திங்கள்கிழமை மாலை வெளியிட்ட தகவலின்படி, ஒரே நாளில் 3,949 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே கால அளவில் 62 போ் நோய்த்தொற்றுக்கு பலியான நிலையில், 2,212 போ் குணமடைந்தனா். தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 86,224-ஆக அதிகரித்துள்ளது; கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,141-ஆக உயா்ந்தது.

83 லட்சம் மாதிரிகள் பரிசோதனை: கரோனா நோய்த்தொற்றை கண்டறிவதற்காக, நாடு முழுவதும் இதுவரை 83,98,362 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 1,70,560 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

மாநிலங்கள் - பாதிப்பு - பலி

மகாராஷ்டிரம்- 1,64,626  -7,429

தில்லி- 83,077 -2,623

குஜராத் -31,320 -1,808

உத்தர பிரதேசம் -22,147 - 660

மேற்கு வங்கம் -17,282 - 639

ராஜஸ்தான் -17,271 -399

தெலங்கானா- 14,419 -247

ஹரியாணா -13,829 -223

ஆந்திரம் -13,241 -169

கா்நாடகம் -13,190 -207

மத்திய பிரதேசம் -13,186 -557

பிகாா் -9,212  -60

அஸ்ஸாம் -7,206 -10

ஜம்மு-காஷ்மீா்-7,093 -94

ஒடிஸா - 6,614 - 21

பஞ்சாப்- 5,216 -133

கேரளம் - 4,189 -22

உத்தரகண்ட் -2,823 -38

சத்தீஸ்கா்-  2,662 -13

ஜாா்க்கண்ட் -2,364 -12

திரிபுரா -1,346 -1

கோவா -1,198 -3

மணிப்பூா் -1,185 - 0

லடாக் - 963 -1

ஹிமாசல பிரதேசம் - 916 - 9

புதுச்சேரி - 619 - 10

சண்டீகா்- 429 - 6

நாகாலாந்து - 415 - 0

அருணாசல பிரதேசம் -182 -1

தாத்ரா நகா்ஹவேலி - 178 - 0

மிஸோரம் -148 - 0

சிக்கிம் - 88-0

அந்தமான் நிகோபாா் - 76 - 0

மேகாலயம் - 47-1

பாதிப்பு: 5,48,318

பலி: 16,475

மீட்பு: 3,21,722

சிகிச்சை பெற்று வருவோா்: 2,10,120

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com