நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு நாளை தொடங்குகிறது

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு நாளை (மார்ச் 2) தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு நாளை தொடங்குகிறது

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு நாளை (மார்ச் 2) தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

2020-21ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு கடந்த 11 ஆம் தேதியுடன் நிறைவுற்றது.

தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு நாளை (மார்ச் 2) தொடங்குகிறது. பட்ஜெட் மீதான விவாதத்தின் மீது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துப் பேசுகிறார். இந்தக் கூட்டத்தொடரில் 45 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தில்லியில் நடைபெற்ற வன்முறைக்குப் பிறகு பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவிருக்கிறது. இதனால் வன்முறை குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோன்று பொருளாதாரப் பிரச்னை, அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு வருகை உள்ளிட்டவை குறித்தும் கூட்டத்தொடரில் பேசப்படும் என எதிர்பார்ப்பு உள்ளது.

பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கவுள்ளதையடுத்து,  காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தில் அவரது தலைமையில் கட்சியின் முக்கியத் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. 

இதற்கிடையே மார்ச் 26ம் தேதி மாநிலங்களவையில் காலியாக உள்ள 55 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com