நாடாளுமன்றத்திலும் அமித் ஷா ராஜிநாமா குறித்து வலியுறுத்துவோம்: அதீர் ரஞ்சன் சௌதரி

நாடாளுமன்றத்திலும் அமித் ஷா ராஜிநாமா குறித்து வலியுறுத்துவோம்: அதீர் ரஞ்சன் சௌதரி

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்விலும் தில்லி வன்முறை தொடர்பாக அமித் ஷாவை ராஜிநாமா செய்யக்கோரி வலியுறுத்துவோம் என காங்கிரஸ் தலைவர் அதீர் ரஞ்சன் சௌதரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்விலும் தில்லி வன்முறை தொடர்பாக அமித் ஷாவை ராஜிநாமா செய்யக்கோரி வலியுறுத்துவோம் என காங்கிரஸ் தலைவர் அதீர் ரஞ்சன் சௌதரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நாளை (திங்கள்கிழமை) தொடங்குகிறது. இந்நிலையில், காங்கிரஸ் மக்களவைத் தலைவர் அதீர் ரஞ்சன் சௌதரி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவிக்கையில்,

"அனைத்து முக்கிய விவகாரங்களையும் எழுப்பி, பாஜகவின் முகத்திரையை கிழப்போம். அவர்களை விடமாட்டோம். அமித் ஷாவை ராஜிநாமா செய்யக்கோரி வலியுறுத்தி வருகிறோம். நாடாளுமன்றத்திலும் அதைத் தொடருவோம். அவர்களது கண்காணிப்பில்தான் தில்லி வன்முறை நிகழ்ந்துள்ளது. தற்போது மேற்கு வங்கத்திலும் அதேதான் நடக்கிறது. அதே சூழலை உருவாக்குகின்றனர். மேற்கு வங்கத்திலும் தேசத் துரோகிகளைச் சுடுங்கள் என்ற கோஷம் எழுப்பப்பட்டுள்ளது.

அவர்கள்தான் நாட்டைப் பிரிக்க முயல்கின்றனர். வடகிழக்கு முதல் தில்லி வரை, தில்லி முதல் கர்நாடகா வரை அனைத்து இடங்களிலும் அவர்கள்தான் மக்களைப் பிரிக்கின்றனர். ஒட்டுமொத்த நாடும் மெல்லமெல்ல வகுப்புவாத வன்முறையால் சிக்கித் தவிக்கத் தொடங்குகிறது. எங்கு போனாலும் அவர்கள் விஷத்தை மட்டுமே கக்குவார்கள்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com