தில்லி வன்முறை: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 47 ஆக உயர்வு

தில்லியில் கடந்த வார தொடக்கத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று (திங்கள்கிழமை) 47 ஆக உயர்ந்தது.
தில்லி வன்முறை: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 47 ஆக உயர்வு


தில்லியில் கடந்த வார தொடக்கத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று (திங்கள்கிழமை) 47 ஆக உயர்ந்தது.

வடகிழக்கு தில்லி பகுதியில் கடந்த வாரம் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) ஆதரவு மற்றும் எதிர் பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, இந்த மோதல் வன்முறையில் முடிவடைந்தது. இந்த வன்முறை நிகழும்போது காவல் துறையினர் சில இடங்களில் வன்முறைத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதையடுத்து, இந்த வன்முறை குறித்து விசாரணை நடத்த தில்லி குற்றப்பிரிவு காவல் துறை கீழ் இரண்டு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வன்முறை சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்று 47 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மாலை கோகுல்புரி என்ற பகுதியில் இருந்து 4 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இன்று கரவல் நகரில் இருந்து மேற்கொண்டு ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டாக்டர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் மீனாக்ஷி் பரத்வாஜ் முன்னதாக தெரிவிக்கையில், "நேற்று மாலை 4 உடல்கள் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டன. உடற்கூறு ஆய்வு இன்று நடைபெறுகிறது" என்றார்.

இதுவரை குரு தெக் பஹதூர் மருத்துவமனையில் இருந்து 38 பேரும், லோக் நாயக் மருத்துவமனையில் இருந்து 3 பேரும், ஜக் பர்வேஷ் சந்தர் மருத்துவமனையில் இருந்து ஒருவரும், டாக்டர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் இருந்து 5 பேரும் உயிரிழந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com