அடுத்த வாரம் முழுவதும் வங்கிகள் மூடப்படுமா?

பொது விடுமுறை, வேலைநிறுத்தப் போராட்டம் என அடுத்து வரும் வாரம் முழுவதும் வங்கிச் சேவை பாதிக்கப்படும் சூழல் நிலவி வந்த நிலையில்
கோப்புப் படம்
கோப்புப் படம்

வங்கி ஊழியர்களின் போராட்டம் திரும்பப் பெறப்பட்டதால் பொது விடுமுறை, வேலைநிறுத்தப் போராட்டம் என அடுத்து வரும் வாரம் முழுவதும் வங்கிச் சேவை பாதிக்கப்படும் சூழல் தவிர்க்கப்பட்டுள்ளது.

நவம்பர் 1, 2017 முதலான ஊதிய திருத்தக் கோரிக்கையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி மார்ச் 11, 12  மற்றும் 13 ஆகிய 3 நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்திருந்தது.

இதனிடையே மார்ச் 8, 14 மற்றும் 15 ஆகியவை வார இறுதி விடுமுறை நாள்களாக வருகின்றன. அதுபோன்று ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு மார்ச் 10ஆம் தேதி பொது விடுமுறை தினமாக உள்ளது.

இந்த நிலையில், மார்ச் 9ஆம் தேதி அஸ்ரத் அலியின் பிறந்தநாளை முன்னிட்டு உத்தரப்பிரதேசத்தில் மட்டும் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இருப்பினும் இதர மாநிலங்களில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளதாலும், விடுமுறை தினங்களுக்கு மத்தியில் இருப்பதாலும் அன்றைய தினம் வங்கியின் இயக்கம் பெருமளவில் பாதிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டது. 

இதனால், மார்ச் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் மார்ச் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை 8 நாள்கள் வங்கிச் சேவை பாதிக்கப்படும் நிலை உண்டானது.

ஆனால், ஊதிய உயா்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக வங்கிகள் கூட்டமைப்பு உறுதி அளித்ததால், மாா்ச் 11 முதல் 3 நாள்கள் நடைபெறவிருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை வங்கி ஊழியா் சங்கங்கள் திரும்பப் பெற்றுள்ளன. எனவே, அடுத்த வாரம் முழுவதும் வங்கிகள் இயங்காது என்ற நிலை தற்போது இல்லை. ஆகவே பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com