உலக நாடுகளை உலுக்கும் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இந்தியாவை காப்பது எது தெரியுமா?

சீனாவில் மட்டும் 2,900 பேர் கரோனா வைரஸ் பாதித்து உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் என்று கணக்கில் எடுத்துக் கொண்டால் பலி எண்ணிக்கை 3000க்கும் மேல் உள்ளது.
உலக நாடுகளை உலுக்கும் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இந்தியாவை காப்பது எது தெரியுமா?


சீனாவில் மட்டும் 2,900 பேர் கரோனா வைரஸ் பாதித்து உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் என்று கணக்கில் எடுத்துக் கொண்டால் பலி எண்ணிக்கை 3000க்கும் மேல் உள்ளது.

சீனாவை உலுக்கிவிட்டு தற்போது உலக நாடுகளை நோக்கி படையெடுத்திருக்கும் கரோனா வைரஸ் ஏற்கனவே இந்தியாவிலும் காலடி எடுத்து வைத்துவிட்டது. 

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் ஏற்கனவே கேரளாவில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர். தற்போது புதிதாக தெலங்கானாவில் ஒருவருக்கும் புது தில்லியில் ஒருவருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக, சீனாவின் அண்டை நாடான இந்தியாவில் கரோனா வைரஸ் பரவினால், மக்கள் தொகை பெருக்கம் மற்றும் மக்களின் வாழ்வியல் முறையால் கடும் பாதிப்பு ஏற்படும் என்பதால், அமெரிக்க உளவு அமைப்புகள் கூட இந்தியா மீது அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்று கவலை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் கரோனா பாதிப்பு இதுவரை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாததற்கு காரணம் என்று மிக முக்கிய விஷயமாக ஒன்றுதான் கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது, கரோனா வைரஸ் பரவல் பெரிய அளவில் இந்தியாவில் பாதிக்காததற்கு, இந்தியாவின் தட்பவெப்ப நிலையே காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சீனாவில் கரோனா வைரஸ் பரவல் உச்சக்கட்டத்தில் இருந்த போது அங்கு குளிர் மற்றும் மழைக்காலமாக இருந்தது. அதனால், கரோனா வைரஸ் மிக எளிதாக உயிர்பிழைத்து வேகமாகப் பரவத் தொடங்கியது. அதேப்போல தற்போது ஈரான், இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.

இதுபோலவே மெர்ஸ், சார்ஸ், எபோலா, மஞ்சள் காய்ச்சல் போன்றவை ஆசியா, அமெரிக்கா, ஆப்ரிக்க நாடுகளை கடந்த காலங்களில் கடுமையாக தாக்கிய போதும் இந்தியாவில் இதன் தாக்கம் சற்றுக் குறைவாகவே இருந்தது. 

எனவே, இந்தியாவில் தற்போது நிலவும் வெப்பம் காரணமாகவே, வைரஸின் உயிர் வாழும் தன்மை குறைந்து, பரவல் கட்டுப்படுகிறது என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே இந்தியாவிலும் அதிக வெப்பம் காணப்படும் வட இந்தியாவைக் காட்டிலும் குறைந்த தட்பவெப்பநிலை இருக்கும் தென்னிந்தியாவின் சில பகுதிகளில் வைரஸ் தொற்று ஏற்படும் போது அதிக பாதிப்பு ஏற்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்று பரவலில், இந்தியாவின் தட்பவெப்பநிலை எந்த அளவுக்கு தடுப்புக் கவசமாக இருக்கிறது என்பதை வேண்டுமானால் அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியாவிட்டாலும், நிச்சயம் இந்தியாவில் கரோனா உள்ளிட்ட வைரஸ் தொற்று பரவலை தடுப்பதில் வெப்பநிலை முக்கியக் காரணியாக இருந்து வருகிறது என்பதை மறுக்க முடியாது என்பதே உண்மை.

மேலும், பொதுமக்களும் பொதுச் சுகாதாரத்தை நல்ல முறையில் கடைப்பிடித்து, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதும், அடிக்கடி கைகளை சோப்பு போட்டுக் கழுவுதல், இருமல் மற்றும் தும்மலின் போது கைக்குட்டையை வைத்து மறைத்தபடி தும்முவது போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும் என்றும் மாநில சுகாதாரத்துறைகளும் அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கரோனா வைரஸ் பாதித்த நாடுகளுக்குச் செல்வதை மக்கள் தவிர்க்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com